Show all

சாதிக்க முடியவில்லையால் மூடுகிறது பணவணிகத்தை! இந்தியாவில் பொருள் வணிகத்தில் வாகை சூடிய சியோமியால்

சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாட்டினை நிறுத்த உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது சியோமி நிறுவனம். ஆனால் தற்போது அதன் நிதி வணிகத்தினை முடக்கி இருப்பதால் இந்தியாவில் சியோமியின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளது.

14,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: சீனாவின் பேரறிமுக மிடுக்குப்பேசி உற்பத்தியாளரான சியோமி, அதன் நிதித் சேவைகளை இந்தியாவல் நிறுத்தி உள்ளது. இந்தியாவில் அதன் நிதி சேவையினை தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்குள் சியோமி இத்தகைய முடிவினை எடுத்துள்ளது. 

சியோமி நிதி சேவை நிறுவனம் அண்மையில்தான் அதன் மைப்பே மற்றும் மைக்கிரெடிட் செயலிகளை அதன் சொந்த செயலிக் கடையில் இருந்தும், கூகுள் விளையாட்டுக்கடையில் இருந்தும் அகற்றியது. 

சீனாவினை சேர்ந்த இந்த பேரளவு நிறுவனம் உலகம் முழுவதும் இன்றும் முன்னணி மிடுக்குப்பேசி விற்பனையாளராக வலம் வந்து கொண்டுள்ளது. சியோமியால் அதன் நிதி சேவையில் வெற்றிகரமாக அப்படி வலம் வர முடியவில்லை. என்றே கூற வேண்டும். 
தற்போது இந்தியாவிலும் அதன் நிதி வணிகத்தினை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது சியோமி நிறுவனம். தனது முதன்மை வணிகத்தில் கவனம் செலுத்த உள்ளதாகவும், இதனால் அதன் நிதி சார்ந்த வணிகங்களை மூடிவிடுவதாகவும்  தெரிவித்துள்ளது. 

சியோமி மீது இந்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக சியோமியின் 676 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டது. மேலும் சியோமி இந்தியா நிறுவனம் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பிய போது, வங்கிகளிடமும் தவறான தகவல்களை கூறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் தான் நடைமுறையாக்கத்துறை சொத்துக்களை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டது இந்த அடிப்படைகளால் சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாட்டினை நிறுத்த உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது சியோமி நிறுவனம். 

மேலும் நாங்கள் எங்களின் நல்ல பெயரை மீட்க நாங்கள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது அதன் நிதி வணிகத்தினை முடக்கி இருப்பதால் இந்தியாவில் சியோமியின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,418.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.