Show all

பதிமூன்றாயிரத்து ஐநூறு கிலோ தங்கம் சம்பாதித்திருந்த ஊழல் அதிகாரி!

சீனாவில் ஊழலில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்து பதிமூன்றாயிரத்து ஐநூறு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹைக்கு என்ற இடத்தில் அரசு அதிகாரி ஒருவர், தனது வீட்டில் ஏராளமான தங்கத்தை பதுக்கி வைத்திருப்பதாக ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஊழல் அதிகாரியின் வீட்டை, ஊழல் தடுப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, குவியல் குவியலாக தங்க பிஸ்கட்டுகள், நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு பதின்மூன்றாயிரத்து ஐநூறு கிலோவாம். நம்ம ஊரு மக்கள் கணக்குப்படி பதினாறு இலட்சத்து எண்பத்தி ஏழாயிரத்து ஐநூறு பவுன். இந்திய பணமதிப்பு ஐயாயிரத்து இருநூற்று தென்னூற்று ஆறு கோடியே ஐந்து இலட்சம் ரூபாய். 

மேலும் அவரது வங்கிக் கணக்கில் இருந்து 2லட்சத்து 31 ஆயிரத்து 341 கோடி பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சீனாவில் அதிகபட்ச ஊழலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுவது வழக்கம். இவரைச் சீன அரசு என்ன செய்யப் போகிறது என்று இன்னும் தகவல் வெளியாகவில்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,295.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.