Show all

உருவாகப் போகிறதா நித்தியானந்தா நாடு! சொந்தமாக தனித்தீவு வாங்கி குடியேறிவிட்டாராம் நித்தியானந்தா.

தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஈக்குவடார் நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவை, அமெரிக்க பக்தர்கள்மூலம் வாங்கி விட்டாராம் நித்தியானந்தா. ஒருவழியாக இரு ஆண்டுகளுக்கு முன்பே பல கோடி ரூபாய் மதிப்பில் தீவு வாங்கிவிட்டார்கள். அந்தத் தீவில் குடியேற, சத்தமில்லாமல் வியூகம் வகுக்கப்பட்டு நித்தியானந்த அங்கு குடியேறிவிட்டாராம்.

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஈக்குவடார் நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவை, அமெரிக்க பக்தர்கள்மூலம் வாங்கி விட்டாராம்  நித்தியானந்தா. ஒருவழியாக இரு ஆண்டுகளுக்கு முன்பே பல கோடி ரூபாய் மதிப்பில் தீவு வாங்கிவிட்டார்கள். அந்தத் தீவில் குடியேற, சத்தமில்லாமல் வியூகம் வகுக்கப்பட்டது. முதலில், பிடதியிலிருந்து ஆன்மிகப் பயணம் என்று கிளம்பி, உத்தரப்பிரதேசத்தில் சில நாள்கள் தங்கியுள்ளார் நித்தியானந்தா. அங்கு இருந்து தரைவழி மார்க்கமாக நேபாளம் சென்றுள்ளார்.

ஹிந்து நாடான நோபாளத்தில் அரசு அதிகாரிகள் நித்தியானந்தாவை ஹிந்து மதத் தலைவராகக் கருதி, அரசமரியாதையுடன் அவரை காட்மாண்ட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். காட்மாண்ட் விமானநிலையத்திலிருந்து தனி விமானம்மூலம் ஈக்குவடார் அருகே உள்ள தன் தீவுக்குச் சென்றிருக்கிறார் நித்தியானந்தா. அவருடன் இரண்டு பெண் சீடர்களும், ஜனார்த்தன சர்மாவின் மூத்த மகளும் உடன் சென்றுள்ளனர். அதற்குப் பிறகு மேலும் சிலர் அந்தத் தீவுக்குச் சென்று ஐக்கியமாகியுள்ளனர். இந்தியாவிலிருந்து மொத்தம் 27 பேர் கிளம்பி, அந்தத் தீவில் தஞ்சமடைந்துள்ளனர் என்று தெரியவருகிறது.

தனித்தீவை சொந்தமாக வாங்கினாலும் அந்தத் தீவு மற்றொரு நாட்டின் கட்டுப்பாட்டில் தான் தற்போதுவரை இருக்கிறது. அந்தத் தீவை தனிநாடாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் நித்தியானந்தா. இந்தத் தகவல்தான் இந்திய அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றது.

நித்தியானந்தா தரப்பிலிருந்து ஈக்குவடார் நாட்டின் அரசு உயர் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தங்களது தீவை தனிநாடாக அறிவிக்க அனுமதி வேண்டும் என்று நித்தியானந்தா தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. ஓர் இடத்தை தனிநாடாக அறிவிக்க, ஐக்கிய நாடுகள் அவையின் ஒப்புதல் கட்டாயம். அதேபோல் புதிதாக ஒரு நாட்டை ஐக்கிய நாடுகள் அவை அங்கீகரிக்க வேண்டுமென்றால், அதற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உலக நாடுகள் ஒப்புதல் அளிக்க வேண்டுமாம். அதற்கான வேலையை சில மாதங்களுக்கு முன்பே நித்தியானந்தா தரப்பு தொடங்கி விட்டதாம்.

நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் துலாபாரம் நிகழ்ச்சி ஆண்டுக்கு நான்கு முறை நடக்குமாம். அப்போது நித்தியானந்தாவின் எடைக்கு நிகரான தங்கத்தை பக்தர்கள் வழங்குவர். இதுவரை அப்படிப் பெறப்பட்ட நகைகளின் எடை மட்டுமே ஆறு டன் எனக் கூறப்படுகிறது. அவற்றில் பெரும்பகுதி இப்போது நித்தியானந்தாவின் தீவுப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. இப்போது இந்த விவரங்களையெல்லாம் தீவிரமாக விசாரித்துவருகிறது காவல்துறை.

அனைத்து நாட்டு குற்ற ஒழிப்பு காவல்துறை உதவியுடன் நித்தியானந்தாவைக் கைதுசெய்யுங்கள் என்று குஜராத் மாநில காவல்துறைக்கு குஜராத் அறங்கூற்றுமன்றமே உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், நித்தியானந்தாவை இனி கைதுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடுமோ எனக் கவலைகொள்கிறது இந்திய அரசு. 

நித்தியானந்தாவின் செயலாளராக இருந்த ஜனார்த்தன சர்மா, 'என் இரண்டு மகள்களை, நித்தியானந்தா கடத்திச் சென்றுவிட்டார். அவர்களை மீட்டுத் தர வேண்டும்” என்று குஜராத் மாநில காவல்துறையில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்தே நித்தியானந்தா விவகாரம் மீண்டும் பெரிதாகியது. 

இதற்கிடையே இந்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரா அமைப்பின்மூலம் தகவல் வந்துள்ளது. அந்தத் தகவலைக் கேட்டு இந்திய அரசே அதிர்ச்சியடைந்துள்ளதாம். அந்தத் தகவல்தான் நித்தியானந்தா தனித்தீவு- தனிநாடு.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,352.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.