Show all

சின்னதாய் ஒரு வெளிச்சம்- ஏற்றியவர் மாவட்ட ஆட்சியர்! நின்று கொல்லுகிறதே பணமதிப்பிழப்பு என்று தமிழகம் பரபரத்த நிலையில்

பல ஆண்டுகளாக சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம் தங்களுடைய மருத்துவ செலவுக்குக் கூட கைகொடுக்கவில்லையே என வருத்தம் அடைந்தனர். மூதாட்டிகள் இருவர். ஏனென்றால் அவர்களின் அந்த சேமிப்புப்பணம்- அவர்களிடம் இருந்த அந்த 46 ஆயிரம் ரூபாய்- மோடி அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ500 ரூ1000 தாள்கள். அவர்களின் வாழ்வில் சின்னதாய் ஒரு வெளிச்சம் ஏற்றியுள்ளார் தமிழக அதிகாரி. மாநில அரசு என்று, மக்களுக்கு நெருக்கமான ஓர் அரசு இருக்கின்ற காரணத்தாலேதான்  

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121:  பல ஆண்டுகளாக சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம் தங்களுடைய மருத்துவ செலவுக்குக் கூட கைகொடுக்கவில்லையே என வருத்தம் அடைந்தனர். மூதாட்டிகள் இருவர். ஏனென்றால் அவர்களின் அந்த சேமிப்புப்பணம்- அவர்களிடம் இருந்த அந்த 46 ஆயிரம் ரூபாய்- மோடி அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ500 ரூ1000 தாள்கள். அவர்களின் வாழ்வில் சின்னதாய் ஒரு வெளிச்சம் ஏற்றியுள்ளார் தமிழக அதிகாரி. 

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பூமலூர் பகுதியை சேர்ந்தவர்கள் ரங்கம்மாள் அகவை 75. தங்கம்மாள் அகவை 72. இருவரும் அக்காள்-தங்கை ஆவார்கள். இருவரது கணவர்களும் இறந்து விட்டனர். இதில் ரங்கம்மாளுக்கு 4 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். தங்கம்மாளுக்கு 3 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் நடந்து வெவ்வேறு இடத்தில் வசித்து வருகின்றனர்.

 இதனால் அக்காள், தங்கை இருவரும் பூமலூரில் வசித்து வருகின்றனர். அவர்களை அவ்வப்போது மகன்கள் கவனித்து வந்தனர். இந்த நிலையில் அக்காள் ரங்கம்மாள் காசநோயால் அவதிப்பட்டு வந்தார். அவரை மகன்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அப்போது ரங்கம்மாளை பரிசோதித்த மருத்துவர்கள், மேல்சிகிச்சைக்கு பணம் அதிகம் செலவாகும் என்று கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து மூதாட்டிகள் இருவரும் தாங்கள் சேமித்து வைத்து இருந்த பணத்தை மகன்களிடம் கொடுத்தனர். அவை அனைத்தும் மோடி அரசால் பணமதிப்பிழக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் தாள்கள் என தெரிந்த மகன்கள் நின்று கொல்லுகிறதே பணமதிப்பிழப்பு என்று அதிர்ச்சி அடைந்தனர். 

இது பற்றி அறிந்த மூதாட்டிகள் வேதனை அடைந்தனர். ரங்கம்மாளிடம் ரூ.22 ஆயிரமும், தங்கம்மாளிடம் ரூ.24 ஆயிரமும் என மொத்தம் ரூ.46 ஆயிரம் மோடி அரசால் செல்லாததாக்கப்பட்ட ரூபாய் தாள்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக தங்கள் உழைப்பிற்கு கிடைத்த பணத்தை சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த போதும், தங்களுடைய மருத்துவ செலவுக்கு கூட கைகொடுக்கவில்லையே என வருத்தம் அடைந்தனர். மூதாட்டிகளிடம் 46 ஆயிரம் மோடி அரசால் செல்லாததாக்கப்பட்ட  ரூபாய் தாள்கள் இருப்பது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதை அறிந்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், மோடி அரசால் செல்லாததாக்கப்பட்ட  ரூபாய் தாள்கள் வைத்திருந்த மூதாட்டிகளுக்கு உதவ முன் வந்தார். இதையடுத்து நேற்று மூதாட்டிகள் ரங்கம்மாள், தங்கம்மாள் ஆகிய இருவரையும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்தார். பின்னர் இருவருக்கும் முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை வழங்கினார்.

அதன்பிறகு காசநோயால் பாதிக்கப்பட்ட ரங்கம்மாளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவக்கல்லூரி தலைவருக்கு பரிந்துரை கடிதத்தையும் அவரிடம் வழங்கினார்.

மூதாட்டிகளின்- மோடி அரசால் செல்லாததாக்கப்பட்ட பணம் மாற்றப்படுமா? என்பது குறித்து முன்னோடி வங்கி மேலாளர் சத்தியமூர்த்தி கூறும்போது, “மூதாட்டிகளின் மோடி அரசால் செல்லாததாக்கப்பட்ட  ரூபாய் தாள்கள் வைத்திருந்தது குறித்து இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்தோம். அவர்கள் இனிமேல் பணமதிப்பிழக்கப்பட்ட ரூபாய் தாள்களை மாற்ற முடியாது என்றனர். ஆதலால் மூதாட்டிகளிடம் உள்ள- மோடி அரசால் செல்லாததாக்கப்பட்ட  ரூபாய் தாள்களை மாற்ற முடியாது” என்றனர்.

ஒரு சப்பையான மாநில அரசு கூட, தங்கள் மக்களுக்கு, ‘பணமதிப்பிழப்பு’ போன்ற உழைப்பு வீணடிப்பை ஒரு போதும் செய்யாது. பாஜகவுக்கு தெரிந்ததெல்லாம் மத, இன, மொழி, கட்சி, கார்ப்பரேட்டுகள்  ஆதிக்கவாதம் மட்டுந்தாம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,352.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.