Show all

நட்புநாடுகள் நெறுக்குதலா! சிறிசேனா அரசுக்கு பெரும்பான்மை கிடையாது. இந்த நிலையில் விக்கிரமசிங்கேவை ஏன் அதிபர் சிறிசேனா நீக்கினார்

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரணில் விக்கிரமசிங்கே இல்லாவிட்டால் சிறிசேனா அரசுக்கு பெரும்பான்மை கிடையாது. இந்த நிலையில் விக்கிரசிங்கேவை ஏன் இலங்கை அதிபர் சிறிசேனா நீக்கினார் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை விடுதலைப் புலிகளுடனான போரை முடிவுக்கு கொண்டு வர அன்றைய ராஜபக்சே அரசு, கன்னா பின்னாவென்று உலக நாடுகள் ஆதரவை நிபந்தனைகளோடு பெற்றிருந்தன. அந்த நிபந்தனைகள் தற்போது இலங்கை அரசியலில் புயலை ஏற்படுத்தியிருக்கக் கூடுமோ என்றும் பேசப்பட்டு வருகிறது.

தன்னையும், கோத்தபயா ராஜபக்சேவையும் கொலை செய்ய சதி நடப்பதாக சில கிழமைகளுக்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தார் சிறிசேனா. இந்த விவகாரம் தொடர்பாக அவருக்கும், ரணிலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த மோதல்தான் தற்போது வெடித்து கூட்டணியை விட்டு விலகும் முடிவுக்கு சிறிசேனாவை இட்டுச் சென்றுள்ளது.

சிறிசேனா, ராஜபக்சே கட்சி இணைந்து நாடாளுமன்றத்தில் 95 பேர் தான் உள்ளனர். அதேசமயம், ரணில் விக்கிரசிங்கேவுக்கு மட்டும் 106 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எனவே பெரும்பான்மை இல்லாத சிறிசேனா அரசு, எப்படி தலைமை அமைச்சர் பதவியிலிருந்து விக்கிரசிங்கேவை நீக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த நாட்டுச் சட்டப்படியும், பெரும்பான்மை இல்லாத அரசால் தலைமை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய முடியாது.

அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ராஜபக்சே கட்சி கூடுதல் வெற்றி பெற்றது. அது முதலே ரணில் கட்சிக்கும், சிறிசேனா கட்சிக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கொலைச் சதியில் அது பெரிதாக மாறி இப்போது ராஜபக்சேவை தலைமைஅமைச்சராக்க சம்பந்தமில்லாமல் முன்னெடுக்கப் பட்டிருக்கிறது. 
இந்த நிலையில் அமெரிக்க: இலங்கையின் அரசியல் அமைப்பு சட்டத்தைக் காப்பாற்றும் படி இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,953.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.