Show all

தென்கொரியாவில் ஆர்ப்பாட்டம்! மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கி இதுவரை அந்த விருது பெற்றவர்களை அசிங்கப் படுத்த வேண்டாம்

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தென்கொரிய தலைநகர் சோலில் கொரிய மனித உரிமைகள் குழு, ஆசிய தகுதி அமைப்பு மற்றும் அரசு சாரா மனித பாதுகாப்பு குழு என பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்தியத் தலைமை அமைச்சர் மோடிக்கு வழங்கப்பட இருக்கும், சியோல் அமைதி விருதுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

தென்கொரியாவில் உள்ள, சியோல் அமைதி விருது மற்றும் கலாசார தளம் என்ற ஒரு அமைப்பு சர்வதேச அளவில் ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக பங்களித்த ஒருவருக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை, சோல் அமைதி விருது என்ற விருதை வழங்குகிறது.

இந்த ஆண்டுக்கான, சியோல் அமைதி விருது இந்திய தலைமை அமைச்சர் மோடிக்கு வழங்கப்படுவதாக விருது வழங்கும் அமைப்பின் தலைவர் குவோன் இ-ஹையோக் கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தார். மோடி ஆதரவாளர்கள் மற்றும் ஒரு சில இந்தியர்களிடையே இது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், உலக அளவில் பெரும்பாலான மக்கள் இந்த விருது மோடிக்கு வழங்கப்படுவதை விரும்பவில்லை.

மேலும் பல சமூக ஊடகபயன்பாட்டாளர்கள் தங்கள் எதிர்ப்பை சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று தென்கொரியாவில் உள்ள பல்வேறு கொரிய சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து இந்திய தலைமை அமைச்சர் மோடியை சியோல் அமைதி விருதுக்குத் தேர்வு செய்தது தவறான முடிவு என்று கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

செய்தியாளர்களிடம் பேசிய ஆர்ப்பாட்டக்காரர்கள், சியோல் அமைதி விருது என்பது மிகவும் புனிதமான விருது, அதைத் தகுதி இல்லாதவர்க்கு வழங்குவதை நாங்கள் ஒரு பொழுதும் அனுமதிக்க மாட்டோம். தற்போழுது தேர்வாகி உள்ள இந்திய தலைமை அமைச்சர் மோடி இந்த விருதுக்கு எந்த விதத்திலும் தகுதி உடையவர் அல்ல. 

தலைமை அமைச்சர் மோடி பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் முதல்வராக இருந்த பொழுது முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தில் அவரது அரசின் பங்கை வரலாறு மன்னிக்காது. அப்பொழுது நடந்த இந்து முஸ்லீம் கலவரத்தில், அப்பாவி முஸ்லீம் மக்கள் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்று கூறினர்.

மேலும் அவர்கள் மோடியை கொரியாவின் முன்னாள் அதிபர் சுன்-டூ-வான் அவர்களோடு ஒப்பிட்டு முழக்கமிட்டனர். அதிபர் சுன்-டூ-வான் என்பவர் முப்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிபராக இருந்த பொழுது நடந்த கொரிய இனப்படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆக மோடிக்கு வழங்கப்படும் இந்த விருது கிட்டத்தட்ட அதிபர் சுன்-டூ-வான் அவர்களுக்கு வழங்கப்படும் விருதைப் போன்றதாகும் என எச்சரித்தனர். அதுமட்டுமில்லாமல் இந்த விருது, இந்தியத் தலைமை அமைச்சர் மோடிக்கு வழங்கப்பட்டால் அது மற்ற சியோல் அமைதி விருது பெற்றவர்களை அவமதிக்கும் செயலாகும், எனவே உடனடியாக இந்த முடிவைப் பரிசீலிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.

சும்மாவே இருந்திருக்கலாம், தென்கொரியாவில் உள்ள, சியோல் அமைதி விருது மற்றும் கலாசார தளம் அமைப்பு. இப்பொழுது உலகம் முழுவதும் மோடி அசிங்கப் படுத்தப் பட்டு வருகிறார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,953.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.