Show all

அமெரிக்கா எச்சரிக்கை! இலங்கையில் அரசியலமைப்பு பின்பற்றப்பட வேண்டும்

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழல் குறித்து பேசியுள்ள அமெரிக்கா, இலங்கையின் அனைத்து கட்சிகளும், அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. 

இலங்கையின் அதிபரான சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அதேவேளை சம்பந்தமில்லாமல் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பதவி ஏற்றுக்கொள்ள வைக்கப் படப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை அரசின் அரசியல் அமைப்பு சட்டத்தில் அதிபர் தலைமை அமைச்சரை பதவிநீக்கம் செய்வதற்கு அதிகாரம் இல்லை என்றும், சம்பந்த மில்லாமல், ராஜபக்சேவை தலைமை அமைச்சராக நியமித்தது சட்டவிரோதமானது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள அமெரிக்கா, இலங்கையின் அனைத்து கட்சிகளும், அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு நடக்குமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும், இலங்கை அரசு மனித உரிமைகள், நாட்டின் சீர்திருத்தம், நீதி, சமரசம் ஆகியவற்றை நிலைநாட்ட வேண்டும் என எதிர்ப்பார்ப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,953.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.