Show all

யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!

வாழைப்பழங்கள் மற்றும் மாம்பழங்கள், காய்கறிகள், ஊறுகாய்கள் மற்றும் அரிசி உணவுகளுடன் சேர்த்து, மலிவு உணவுகள் யாழில் பேரறிமுகமானவைகள் என அமெரிக்க  தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

25,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆசியாவில் உல்லாசப் பயணிகள் பயணம் செய்யக்கூடிய மிகச் சிறந்த இடங்களில் யாழ்ப்பாணமும் ஒன்று என பேரறிமுகமான அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று பட்டியலிட்டுள்ளது.

பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் அழகிய தென் கடற்கரை, நடுப்பகுதி தேயிலை நாட்டிற்குச் செல்கிறார்கள்.

இவை இரண்டும் கொழும்பிலிருந்து பயணிக்க எளிதானது மற்றும் பேரறிமுகமான தண்டவாளங்களில் பயணம் செய்ய வரும் நிழற்பட விரும்பிகளால் கொண்டாடப்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. 

ஆசிய அளவில் யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த அங்கீகாரம் ஈழத்
தீவின் வடக்குப் பகுதியான, யாழ்ப்பாணம் தமிழ் பேசும் மக்களின் முதன்மையான தாயகமாகும். இங்கு ஒரு கவர்ச்சிகரமான கலாசாரம் உள்ளது.

அலங்கரிக்கப்பட்ட, ஒளிமயமான நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் பரந்த வெள்ளை காலனித்துவ கால யாழ்ப்பாண நூலகம் இரண்டும் கொண்டாடத்தக்கவைகள்.

வாழைப்பழங்கள் மற்றும் மாம்பழங்கள், காய்கறிகள், ஊறுகாய்கள் மற்றும் அரிசி உணவுகளுடன் சேர்த்து, மலிவு உணவுகள் யாழில் பேரறிமுகமானவைகள் என அமெரிக்க  தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மற்றைய இடங்களின் பட்டியில் வரும் சில பகுதிகள்: ஈப்போ, மலேசியா, இசான், தாய்லாந்து, லெசான், ஸ்கார்டு, நிக்கோ ஜப்பான், தலாத், வியட்நாம், டாவோ, பிலிப்பைன்ஸ், இந்தியாவில் மேகாலயா, புலாவ் உபின், சிங்கப்பூர், சமோசிர் தீவு, இந்தோனேசியா, பக்சே, லாவோஸ், பங்களாதேஷ், டெங்சோங், சீனா கோகுன்சன் தீவுகள், தென் கொரியா, லான் ஹா பே, வியட்நாம், கென்டிங், தைவான் மற்றும் பாண்டே ச்மார், கம்போடியா ஆகிய நாடுகள் ஆகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,488.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.