Show all

இந்த ஆண்டின் உலகின் தலைசிறந்த 'நிறுவனத் தலைவர்கள்' தமிழர் சுந்தர்பிச்சைக்கு மூன்றாம் இடம்

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலை சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களை நிர்வாகிக்கும் தலைவர்களில்   பெரும்பாலானவர்கள் இந்தியர்களாகவும், அதிலும் சுந்தர்பிச்சை அவர்களால் தமிழர்களுக்கும் பெருமிதம்.

இது அனைத்து நாட்டினரையும் சற்று வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சிலிக்கான் வேலியில் வேலை செய்யும் ஒவ்வொரு அமெரிக்கவாசியின் கனவு கூட, ஒரு தலை சிறந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது தான், ஆனாலும் தொடர்சியாக மிகச் சிறந்த நிர்வாகத் திறமையும் இயக்குநர்களாக இந்தியர்கள் தேர்வாகி வருவது மிக, மிக மகிழ்ச்சிiயும் பெருமைiயும் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

சிறந்த நிறுவனத்தலைவர்களின் பட்டியல் வெளியடப்பட்டது, அதில் மைக்ரோசாப்ட் நிறவனத்தின் சத்யா நாதெல்லா முதலிடம் பிடித்திருக்கிறார். 

இரண்டாவது இடத்தில் தி ஹோம் டிபோட் நிறுவனத்தின் இயக்குநர் க்ரைக் மெனெர் உள்ளார். 

மூன்றாவது இடத்தை தமிழகத்தைச் சேர்ந்த நமது சுந்தர் பிச்சை பெற்றுள்ளார். எலோன் மஸ்க் மேலும் தலைவர்கள் அடங்கிய பட்டியலில், ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் 12-வது இடத்திலும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் 14வது இடத்திலும் உள்ளனர். முகநூல் நிறுவனத்தின் மார்க் சூக்கர்பர்க் அவர்கள் 22-வது இடத்திலும், டெல் நிறுவனத்தின் மைக்கேல் டெல் 25-வது இடத்திலும் உள்ளர் என்பது குறிப்பிடத்தகக்து. 

தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு கோடி ஊழியர்கள் தங்களுக்கு பிடித்த தலைவர்கள் யார் என்று தரப்படும் கருத்துகளை வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது அமெரிக்கா முழுவதும் 50,000 நிறுவனங்களில் வேலை செய்யும் ஒரு கோடி நபர்களின் கருத்துகளை வைத்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,009. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.