Show all

விஜயகலா கைது; விடுதலை! ஆளுங்கட்சியில், தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தி, விடுதலை புலிகள் ஆட்சியைக் கௌரவித்ததால்

23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையின் யாழ்ப்பாணத்தில்,  கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இலங்கை அமைச்சர் விஜயகலா! விடுதலைப்புலிகள் குறித்து பேசியது சிங்கள ஆட்சியாளர்களை வெட்கத்தால் உறைய வைத்தது. 

விஜயகலா பேசும் போது, 'தலையால் நடந்தே குடியரசுத்தலைவரை நாங்கள் தேர்வு செய்தோம். ஆனால் குடியரசுத்தலைவர் எங்களுக்கு என்ன செய்தார்?  தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் நாங்கள் எப்படியான வாழ்க்கை வாழ்ந்தோம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். 

எனவே வடகிழக்கு மாகாணங்களில் மக்கள் நிம்மதியாக வாழவேண்டுமானால், எங்களுடைய பிள்ளைகள் நிம்மதியாக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பவேண்டுமாக இருந்தால் தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் வடகிழக்கு மாகாணங்களில் ஓங்கவேண்டும். தமிழீழ விடுதலை புலிகளை வடகிழக்கு மாகாணங்களில் உருவாக்கவேண்டும்' இவ்வாறு விஜயகலா பேசினார்.  விஜயகலா பேச்சு சிங்கள ஆட்சியாளர்களை, குத்திப் பார்த்த காரணத்தால், உடனடியாக அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். 

இந்த நிலையில், மேற்கூறிய பேச்சு தொடர்பாக, விஜயகலாவுக்கு அந்நாட்டு குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை அழைப்பாணை அனுப்பி இருந்தனர். அதன்படி, இன்று காலை காவல்துறை முன்பு அணியமாக விஜயகலா கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கொழும்பு அறங்கூற்றுமன்றத்தில் அணியப்படுத்தப்பட்ட விஜயகலா, பிணையில் விடுவிக்கப்பட்டார். 

விடுதலைப் புலிகளை அங்கிகரிப்பது, சிங்கள ஆட்சியாளர்களுக்கு, தமிழர்களுக்காக தனித்தமிழீழம் தருவதற்கு ஒப்பானதாகும். ஆனால் விடுதலைப் புலிகளின் தகுதியை, திறமையை, ஆளுமையைப் போற்றிக் கொள்வது: அண்ணா அவர்கள் கைக்கெண்டிருந்த 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்கிற பெருந்தன்மை பெருமிதமே ஆகும். இதனை இலங்கை அறங்கூற்று மன்றம் உணர்ந்து கொண்டு, விஜயகலா அவர்களின் மேற்கோளை போற்றிக் கொண்டு, அவர்களை விடுதலை செய்யவும். பாராட்டவும் வேண்டும். 

உண்மையிலேயே! பேரறிஞர் அண்ணா அவர்கள் இன்றைய சிங்கள ஆட்சியாளராக இருந்திருப்பாரேயானால், விஜயகலாவின் இந்தப் பேச்சை பாராட்டி, ஒட்டு மொத்த சிங்கள இனத்;தின் தகுதியை உலக அளவில் உயர்த்திக் காட்டியிருப்பார். அண்ணா அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்களுக்குத் தெரியும்: தமிழின எதிரிகளாக நடந்து கொண்ட காங்கிரஸ்காரர்களை எப்படியெல்லாம் கௌரவப் படுத்தி கையாண்டார் என்பது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,935.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.