Show all

புரிகிறதா! இலங்கை புதிய தலைமைஅமைச்சர் ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த, ஒரே நாடு சீனா. ஒரே தலைவர் சுப்பரமணியசாமி

11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் மகிந்த ராஜபக்சே புதிய தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறித்து சர்வதேச நாடுகள் ஞாயிறு காலை வரை அதிகாரப் பூர்வமாக அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை. அண்மை சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக கொழும்பில் உள்ள சுவிசர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது. ராஜபக்சே தலைமை அமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில், தலைவர்களில் உலக அளவில் முதலாவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியும், நாடுகளில் சீனத் தூதுவர் மட்டுமே இதுவரை அதிகாரப்பூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் இருந்து வெளியேற மறுத்து வரும் நிலையில், இலங்கை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு, ரணில் வாகனங்கள் பறிப்பு, ரணில் விக்ரமசிங்க தங்கியிருக்கும் அலரி மாளிகைக்கு பாதுகாப்பு ஆகியன நிறைவேற்றப் பட்டுள்ளன. வெளிநாட்டுத் தூதுவர்களும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையில் சனியன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், ராஜபக்சேவையும், கொல்வதற்கான முயற்சி குறித்து உரிய விசாரணை நடத்தாமை, கொழும்பு துறைமுகத்தின் மேற்குக் கப்பல் தளத்தை இந்தியாவிற்கு தரும் பரிந்துரை நிராகரிக்கப்பட்டமை, பொருளாதாரத்தை வலுப்படுத்தத் தவறியமை, ஆகிய காரணிகளினால் அதிபர் மைத்திரிபால சிறிசேன, ராஜபக்சவை புதிய தலைமை அமைச்சராக நியமிக்க நேரிட்டதாக, அதிபர் மற்றும் ராஜபக்சே தரப்பிலிருந்து காரணம் கட்டமைக்கப் பட்டுள்ளது. புதிய தலைமை அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டதும் சர்வதேச நாடுகள் வாழ்த்து தெரிவிப்பது இயல்பு என்கிற நிலையில், இலங்கையில் நடத்தப்பட்ட அதிரடி மாற்றம் இயல்புக்கு மாறானது என்பதால் சர்வதேச நாடுகள் இதனை உன்னிப்பாக கவனித்தே வருவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,954.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.