Show all

ஐநாவில், ஹமாஸ் போராளி அமைப்பிற்கு எதிரான அமெரிக்க தீர்மானம் தோல்வி! இந்தியாவும் தீர்மானத்தை ஆதரிக்க வில்லை

22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஹமாஸ் அமைப்பினைக் கண்டித்து ஐ.நா. பொது அவையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 87 வாக்குகள் கிடைத்த போதிலும், அதனை நிறைவேற்றுவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்காமையால் அது தோல்வியடைந்துள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு எதிராக 57 நாடுகள் வாக்களித்திருந்ததுடன், 33 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொண்டிருக்கவில்லை.

ஹமாஸ் அமைப்பினால் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்படுவதைக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டே இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் அமைப்பினரை கண்டித்து ஐநா அவையில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராக ஓட்டளிக்காமல் இந்தியா புறக்கணித்தது. ஹமாஸ் என்பதற்கு இசுலாமிய எதிர்ப்பு இயக்கம் என்று பொருள். ஆனாலும் இவர்கள் சண்ணி இசுலாமியத்தை சேர்ந்த பாலஸ்தீனிய மக்கள் ஆதரவு இயக்கம்.

இது சிங்கள ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் புலிகள் அமைப்பு போல, இஸ்ரேலியர் ஆதிக்கத்திற்கு எதிரான பாலஸ்தீனிய இயக்கமாகும். ஆனால் உலகின் பலநாடுகள், இந்தியா ஆதரவோடு கொன்று குவிக்கப் பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் போல இவர்களுக்கு பெரிய கட்டமைப்பு எல்லாம் இல்லை. 

இஸ்ரேல், பாலஸ்தீன எல்லையில் காஸா பகுதியில் ஹமாஸ் படையினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் படையுடன் பல ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. ஏவுகணை வீசி தாக்குதல் நடத்திவருகிறது. இந்நிலையில் ஐ.நா.அவையில், ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகளை கண்டித்து அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தது, தீர்மானத்தின்மீது ஒட்டெடுப்பு நடந்தது. 

தீர்மானத்திற்கு ஆதரவாக 87 நாடுகள் வாக்களித்தன. எதிராக 58 வாக்குகள் கிடைத்தன. இந்தியா உள்பட 32 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து புறக்கணித்தன. போதிய ஆதரவு இல்லாமல் இந்தத் தீர்மானம் தோல்வியடைந்தது. 

முன்னதாக ஐ.நா. தூதர் நிக்கி ஹாலே கூறியது, இஸ்ரேலுக்கு எதிராக 500 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக ஒரு தீர்மானம்கூட கொண்டு வரப்படவில்லை என்றார்.

இந்தியா வெளியுறவுக் கொள்கை காங்கிரஸ் காலத்திலும், பாஜக காலத்திலும் ஒரே மாதிரியானதுதான். காங்கிரஸ் ஆட்சியில் பார்ப்பனிய அதிகாரிகள் முடிவெடுப்பார்கள். பாஜகவின் ஆட்சியில், பார்ப்பனிய அதிகாரிகளின் முடிவே பாஜகவின் கொள்கையாக இருக்கிறது. இந்தியா போராளி இயக்கங்களை ஒரே மாதிரி ஆதரிப்பதில்லை. உள்ளாய்வு செய்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,995.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.