Show all

முடங்கியது கீச்சு பக்கம்! தீயாய் பரவும் முன்னரே சரியானது

04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சமூக வலைதளங்களில் ஒன்றான கீச்சு பக்கம் முடங்கியது. இதனால் இளைஞர்கள் கொஞ்ச நேரம் பரிதவித்துப் போயினர்.

சமூகவலைதளங்களில் நடிகர், நடிகைகள், செய்தி நிறுவனங்கள், ஆளுநர், தலைமைஅமைச்சர், குடிஅரசு தலைவர் என ஏராளமானோர் கீச்சு பக்கத்தில் கணக்கு வைத்துள்ளனர். இதன் மூலம் மக்கள் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு தங்கள் ஆலோசனைகளையும், கருத்துகளையும் உடனுக்குடன் அனுப்புகின்றனர்.

முகநூல்;, புலனம்; போல் இளைஞர்கள் மத்தியில் கீச்சு பக்கத்துக்கு வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக கீச்சு பக்கம் முடங்கி அதிர்ச்சி அளித்தது.

இந்தத் தகவல் தீயாக பரவி வரும் வேளையிலேயே கீச்சுப் பக்கம் விரைவாகச் சரி செய்யப் பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,760.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.