Show all

தீயாகி வரும் தேடல்! கைலாசா நாட்டுக்குச் செல்ல நுழைவிசைவு நடைமுறை என்ன?

 

நித்தியானந்தாவின் கைலாசா நாட்டுக்குச் செல்ல நுழைவு அனுமதி கேட்டு தீயாகி உள்ளார் அஷ்வின்.

18,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்கு சொல்வதற்கான நுழைவிசைவு (விசா) நடைமுறை என்ன? என்று மட்டைப்பந்து விளையாட்டு வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தனது கீச்சுப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரவிச்சந்திரன் அஷ்வினின் இந்தக் கேள்விக்கு கீச்சு ஆர்வலர்கள் அவரவர் திறமைக்கு தக்கபடி சிறந்த பதில்களை உருவாக்கி, நித்தியானந்தாவை பகடியாடி வருகின்றனர். 

நையாண்டியான விமர்சனங்களை கீச்சிவில் வழக்கமாக முன்வைத்து வருபவர் இந்திய அணியின் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின். உலக அரசியல் முதல் உள்ளூர் நிகழ்வுகள் வரையில் பலவற்றையும் நகைச்சுவையுடன் விமர்சனம் செய்துள்ளார். இம்முறை நித்தியானந்தாவின் கைலாசா தேசத்துக்கு வழிகேட்டு தீயாகி இருக்கிறார் அஷ்வின்.

அஷ்வின் தனது கீச்சுப் பக்கத்தில், “நுழைவிசைவு வாங்குவதற்கான நடைமுறை என்ன? அல்லது நேரடியாக அங்கே சென்று இறங்கும் போது தருவார்களா கைலாசா” எனக் குறிப்பிட்டுள்ளார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,356.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.