Show all

அதிமுகவின் அடிமைத்தனத்தின் உச்சம்! உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி கற்பிக்கப்படும் அவலம்

கொதித்துப்போய் காட்டமாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் தமிழ் அறிஞர் பெருமக்கள்- தமிழ் வளர்ச்சிக்காகத் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்கல்வி மாணவர்களுக்கு ஹிந்தி பயிற்சி அளிக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கிறது. அதிமுக, தன் பாஜக அடிவருடித்தனத்தைத் வெளிபடையாகத் தொடங்கியிருக்கிறது. பாஜக தயவில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதற்கு கைமாறா இது என. 

18,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ் வளர்ச்சிக்காகத் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்கல்வி மாணவர்களுக்கு ஹிந்தி பயிற்சி அளிக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கிற பாஜக அடிவருடித்தனத்தை வெளிபடையாகத் தொடங்கியிருக்கிறது- பாஜக தயவில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசு என, தமிழ் அறிஞர் பெருமக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். 

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் திங்கட்கிழமையன்று இதற்கென நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சித் துறை(யா) அமைச்சர் மபா பாண்டியராஜன் ஹந்தி, சப்பைக்கட்டுக்கு பிரெஞ்சு மொழியும் கற்பிப்பதற்கான சிறப்பு மொழிப் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்துள்ளார். இதற்கென ஆறு லட்ச ரூபாயை தமிழக அரசு அண்மையில் ஒதுக்கீடு செய்திருக்கிறது.

தமிழைப் பரப்புவதற்காகவும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்காகவும் தொடங்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி மொழி கற்பிக்கப்படுவது சரியல்ல என தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரான தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் கோ விஜயராகவன், ஹிந்தி கற்றுக் கொள்வது தற்போதைய காலத்தின் அவசியம் என்று குறிப்பிட்டார். மேலும், தமிழ், ஆங்கிலம் தவிர இன்னொரு மொழியைக் கற்கும் வாய்ப்பு பெரும்பாலும் உயர்மட்டத்தினருக்கே கிடைக்கிறது. தமிழாராய்ச்சி நிறுவனத்தில் படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் படித்து முடித்து வேலை தேடும்போது இன்னொரு மொழி தெரிந்திருப்பது உதவியாகத்தானே இருக்கும்? அதனால், ஒரு உலக மொழியையும் ஒரு இந்திய மொழியையும் கற்பிக்க முடிவுசெய்தோம் அம்மாம்பித்தனமாக.

இந்திய மொழிகளில் மலையாளத்தைக் கற்பிக்கலாம் என, தான் பரிந்துரைத்ததாகவும் ஆனால், மாணவர்கள் ஹிந்தியை விரும்பியதாகவும் தெரிவிக்கும் விஜயராகவன், வடநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உள்ள வாய்ப்புகளை ஹிந்தி தெரியாததால் நம் மாணவர்கள் இழக்க நேர்கிறது என்றார்.

நீங்கள் ஏற்றாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ஹிந்தியை இந்தியாவில் அதிகம் பேர் பேசுகிறார்கள். (இந்திய மொழிகளில் அதிக பேர்களின் தாய்மொழியாக இருப்பது வங்காள மொழி என்று இந்தியாவில் யாருக்குத்தான் தெரிகிறது.) ஆகவே அந்த மொழியை கற்பிப்பதில் என்ன தவறு? இதை அரசியலாக்கக்கூடாது என்றார்.

இந்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞரான தனிநாயகம் அடிகளின் முயற்சியால், பேரறிஞர் அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது அறிவிக்கப்பட்டு, கடந்த 49 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் எதற்காக உருவாக்கப்பட்டது, அதன் நோக்கம் என்ன என்பதை, அந்த அமைப்பின் இணையதளத்தின் முகப்புப் பக்கம் பின்வருமாறு கூறுகிறது: “தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு தமிழறிஞர்களும், நிறுவனமும் பயன்கொள்ளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் என்பன உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அடிப்படை இலக்காக, தலையாய நோக்கமாக அமைகின்றன. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் நமது தமிழைக் கற்பித்தல் என்பது பிறிதொரு நோக்கமாகும்" என்பதாக.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,356.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.