Show all

தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல! சுவிஸ் நாட்டின் மேல்நிலை அறங்கூற்றுமன்றமும் அதே தீர்ப்பு. 12புலிகள் விடுதலை

விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தி போராடிய போதும் அது குற்றவியல் அமைப்பு அல்ல என சுவிஸ் அறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

18,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தி போராடிய போதும், அது ‘குற்றவியல் அமைப்பு அல்ல’ என சுவிஸ் அறங்கூற்றுமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட 12 விடுதலைப் புலிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

சுவிட்சர்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியதாக 12 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை நீண்டகாலம் நடைபெற்றது. கடந்த ஆண்டு, விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றவியல் அமைப்பு இல்லை என சுவிஸ் மத்திய அறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த லுவுசான் மேல்முறையீட்டு அறங்கூற்றுமன்றமும் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தி போராடினாலும் தங்களது இயக்கத்தின் அங்கீகாரத்துக்கான போராட்டம் அது. ஆகையால் குற்ற அமைப்பு இல்லை என்பதை மீண்டும் உறுதி செய்ததது. இத்தீர்ப்பு விவரம், அறங்கூற்றுமன்றத்தின் அறிக்கையாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோரில் 12 விடுதலைப் புலிகளையும் அறங்கூற்றுமன்றம் விடுதலை செய்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,356.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.