Show all

உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் ஓவியம்

லிதுவேனியாவில் உள்ள வில்நீயஸ் நகரில் உள்ள கெய்லி ருகி ஒட்டலில்,

ரஷ்யா ஜனாதிபதி புதின், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் இருவரும் முத்தமிடுவது போன்று சுவர் ஒவியம் வரையப்பட்டுள்ளது.

 

உள்ளூர் கலைஞர் மைண்டகஸ் போனன்  வரைந்த இந்த ஒவியத்தை. கெய்லி ருகி ஒட்டல் உரிமையாளர் டொமினிகாஸ் செகோஸ்கஸ் வெளியிட்டுள்ளார்.

 

இந்த ஒவியத்தை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருவதால், இது மிக விரைவாக லிதுவேனியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

 

அங்கு கடந்த 1979-ம் ஆண்டில் புகழ் பெற்று விளங்கிய கம்யூனிச தலைவர்கள் லியோனிட் பிரஸ்வேனவ் (சோவியத்ரஷியா), எரிச்கோனெக்கர் (கிழக்கு ஜேர்மனி) ஒருவரையொருவர் முத்தமிடும் ஓவியம் ஓட்டல் சுவரில் வரையப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதுகுறித்து கூறுகையில், இந்த புதிய ஒவியம் சோவியத் சகாப்தத்தின் ஊக்குவிப்பு என்று கூறியுள்ளார்.

 

புதின்-டிரம்ப் இடையில் உள்ள ஒற்றுமைகளைப் பார்த்து இந்த ஒவியத்தை வரைந்ததாகவும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட உள்ளார்.

 

இவருக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்து இருந்தார். திறமையும், புத்தி சாலித்தனமும் நிறைந்தவர் என பாராட்டி இருந்தார். அதற்கு புதினுக்கு டிரம்ப் நன்றி கூறியிருந்தார்.

 

இதன் மூலம் இருவருக்கும்இடையில் உள்ள இணக்கம் தெரிகிறது, லிதுவேனியா உள்ளிட்ட ‘ஸ்லேவிக்’ நாடுகளில் ஆண்கள் சந்திக்கும்போது உதட்டுடன் உதடு முத்தமிடுவது பாரம்பரிய பழக்கமாகும். அதன் அடிப்படையில் தான் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.