Show all

எந்தச் சூழலிலும் மரண தண்டனை வழங்குவது தவறு என்று கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது

18,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எந்தச் சூழலிலும் மரண தண்டனை வழங்குவது தவறு என்று, கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை பீடமான வத்திக்கானில் உள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபை கூறியுள்ளது.

மரண தண்டனை என்பது ஒரு தனி மனிதரின் வரம்பு மீறக்கூடாத விவகாரங்கள் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் மீதான தாக்குதல் என்று வத்திக்கான் கூறியுள்ளது.

உலகம் முழுவதும் மரண தண்டனையை ஒழிக்க பாடுபடுவோம் என்றும் கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் மிகவும் தீவிரமான சூழ்நிலைகளில் மட்டுமே மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியும் என்று கத்தோலிக்க திருச்சபை கூறியிருந்தது.

போப் பிரான்சிசின் மரண தண்டனை தொடர்பான கருத்துகளை பிரதிபலிக்கும் வகையில் கத்தோலிக்க திருச்சபையின் முக்கிய முதன்மை போதனைகளில் ஒன்றான மறைக்கல்வி திருத்தப்பட்டுள்ளது.

'சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒருவரை கொலை செய்வது, அவர் குற்றத்தை நினைத்து வருந்துவதையும், அவர் திருந்துவதற்கான சாத்தியம் நிறைந்த வாய்ப்புகளையும் தடுக்கும்' என்று வத்திக்கான் திருச்சபையின் செய்தி அலுவலகம் தெரிவிக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,868.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.