Show all

அமெரிக்கா சீனா போடும் வணிகச் சண்டையாலும் பாதிக்கும் தமிழகம்! இந்தியாவின் சரக்கு-சேவை வரி, பணமதிப்பிழப்பு போதாவென்று

இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ள பாஜகவின் சரக்கு- சேவை வரி, பணமதிப்பிழப்பில்தாம் தமிழகம் சிக்கித் தடுமாறுகிறது என்றால்,  அமெரிக்கா சீனா போடும் வணிகச் சண்டையாலும் பாதிக்கிறது தமிழகம்!

18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்காவும் சீனாவும் ஈடுபடும் வணிகப் போரால் தமிழகத்தின் வணிகம் பாதிக்கிறது. தமிழக வணிகம் பாதிப்பதால் அதை நம்பியிருக்கிற தமிழகத்தின் தொழில் பாதிக்கிறது. தமிழகத்தின் தொழில் பாதிப்பதால் தமிழகத்தின் தொழிலை நம்பி வந்த வட இந்திய தொழிலாளிகளின் வேலையும் கூட பாதிக்கிறது. 

ஆம்! கோவையில் இருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் உலகின் வேறு இருநாடுகளில் நடக்கும் பொருளாதார மோதல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு தமிழகத்தின் தொழில் முனைவோர் மற்றும் வட இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்விலும் எதிரொலிக்கிறது.

இங்குள்ள தொழிலாளர்களில் பிகார், மேற்கு வங்கம், ஒடிஷா போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் கணிசமாக உள்ளனர் என்பதால் பாதிப்புகள் இந்தியா முழுக்க  நீள்கின்றன.

‘இதுவரை கிழமைக்கு ஒரு நாள் மட்டுமே விடுப்பு இருந்தது. இப்போது மாதத்துக்கு 10 நாட்கள் கட்டாய விடுப்பு என்பது சாதாரணமாகிவிட்டது. நான் இங்கு வந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வளவு மோசமான சூழ்நிலையை கண்டதில்லை’ என்கிறார் மேற்கு வங்கத்தில் இருந்து வந்து கோவையில் வேலை பார்க்கும் ரோகித் குமார்.

தேன் தேன்
என்ன தேன்
கொம்பு தேன்
என்ன கொம்பு
மான் கொம்பு
என்ன மான்
புள்ளி மான்
என்ன புள்ளி
இலை புள்ளி
என்ன இலை
வாழை இலை
என்ன வாழை
ரச வாழை
என்ன ரசம்
மிளகு ரசம்
என்ன மிளகு
வால் மிளகு
என்ன வால்
நாய் வால்
என்ன நாய்
மரநாய்
என்ன மரம்
வேர் மரம்
என்ன வேர்
வெட்டிவேர்
என்ன வெட்டி
பாக்கு வெட்டி
என்ன பாக்கு
கொட்டப் பாக்கு
என்ன கொட்ட
மாங்கொட்ட
என்ன மா
அம்மா. 
சார்பியல் கோட்பாட்டை ஐன்ஸ்டீன் கண்டு பிடித்துக் கொடுத்ததாகச் சொன்னாலும், தமிழகக் குழந்தைகளுக்கு முன்பெல்லாம் இப்படி பாடல் மூலமாகவே சார்பியல் கோட்பாட்டை பயிற்சி அளிப்பர்கள் தமிழக பொற்றோர்கள். 

அந்த வகையான சார்பியல் கோட்பாட்டின் படியே: தமிழகத்தை உலகமும், உலகத்தை தமிழகமும் பல ஆயிரம் ஆண்டுகளாக சார்ந்தே இயங்கி வருவதால், உலகில் எந்தப் பிரச்சனை முன்னெடுக்கப் பட்டாலும் தமிழகத்தை பாதிக்க செய்வது இயல்பானதேயாகும்.

இந்தியாவின் நூல் உற்பத்தி கணிசமான அளவு ஏற்றுமதிகளைச் சார்ந்துள்ளது. அதனால், ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளில் எதாவது பிரச்சனை என்றால் இங்கு பாதிப்பு எளிதாகிறது. ஏற்றுமதியை அதிகம் சாராமல் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்வதும் அவ்வளவு சுலபமாக இல்லை.

இந்திய துகில் சந்தையின் பெரும் பங்கை தங்கள் வசம் வைத்திருக்கும் பெரு நிறுவனங்கள் வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து கொள்முதல் செய்கின்றன.

காரணம் வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யும் சரக்குகளுக்கான குறைந்த வரி. இந்திய உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது அவை குறைந்த விலையில் கிடைக்கின்றன.

பணமதிப்பு நீக்கத்தால் துகிலின் சில்லறை வர்த்தகத்தில் நாடு முழுதும் உண்டான பாதிப்பு உற்பத்திச் சங்கிலியின் கண்ணிகளாக இருக்கும் நூற்பாலைகள் முதல் நெசவாளர்கள் வரை எதிரொலித்தது.

அடுத்து அமலான சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் வெவ்வேறு வகை நூல் மற்றும் துணி வகைகளுக்கு வெவ்வேறு வரி விகிதம் விதிக்கப்பட்டது வரி செலுத்துதல் மற்றும் வரிவிலக்கு, கூடுதலாக செலுத்திய வரிகளைத் திரும்பப் பெறுதல் ஆகியவற்றில் சிக்கலை உண்டாக்கியது. அதாவது ஒரே வகை ஆடையைத் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வரி விகிதம்.

பஞ்சு நூலாகி, நூல் துணியாகி, துணி ஆடையாகத் தைக்கப்பட்டு சந்தைக்கு வர இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகின்றன. இந்த மூன்று மாத காலத்தில் பஞ்சின் விலை குறைந்துவிட்டால், ஆடை வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் பஞ்சின் தற்போதைய சந்தை மதிப்பிலேயே துணி மற்றும் ஆடைகள் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

கோவையைச் சுற்றி நிகழும் இந்தப் பிரச்சனைகளின் மையம் கோவையில் இல்லை என்பதுதான் இவற்றுக்கான தீர்வுகளைப் பெறுவதில் சிக்கலை உண்டாக்குகிறது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போரால், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிகரித்தது.

அந்தப் பட்டியலில் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளும் அடக்கம். அதனால் உண்டான பஞ்சு விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கித்தவிக்கும் தமிழகத் துகில் துறைக்கு, இங்குதான் கூடுதல் பிரச்சனை உண்டானது.

சீனா ஆடை உற்பத்திக்கு தமிழகத்தில் இருந்து கணிசமான அளவு நூல் இறக்குமதி செய்து வந்தது. தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்ததால், சீனா அங்கு தனது ஆடை உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதை குறைத்துக்கொண்டது.

ஏற்றுமதியை குறைத்துக்கொண்டதால், உற்பத்தியும் குறைந்தது. ஆடை உற்பத்தியை சீனா குறைத்துக்கொண்டதால், நூலின் தேவையும் குறைந்தது.

அதைத் தொடர்ந்து தமிழகத்தில் இருந்து இறக்குமதி செய்யும் நூலின் அளவையும் குறைத்துக்கொண்டது சீனா. அதனால் தமிழக நூற்பாலைகளில் உற்பத்திகள் தேங்கத் தொடங்கின.

இந்த சங்கிலித் தொடர் பாதிப்புகளின் காரணமான, தமிழக நூற்பாலைகள் இப்போது உற்பத்தியைக் குறைத்துள்ளன. இதன் விளைவு, ஆலைகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் கட்டாய விடுப்பு.

ஆலை நிறுவப்பட்டு பல பத்தாண்டுகளாக தொடர்ந்து கிழமையில் ஆறு நாட்கள் இயக்கப்பட்ட நூற்பாலைகள் தற்போது வேறு வழியில்லாமல் கிழமைக்கு இரண்டு - மூன்று நாட்கள் செயல்படாமல் இருக்கின்றன.

நாளின் 24 மணி நேரமும் இயக்கப்பட்ட ஆலைகள், 16 மணி நேரம் மட்டுமே இயக்கப்படுகின்றன.

வட இந்திய மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை தென் இந்திய மாநிலங்களில் அதிகரித்துள்ளது என்று மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிடைத்த மொழிகள் தொடர்பான தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

தென் இந்திய மாநிலங்களில் இருக்கும் பொருளாதார வளர்ச்சி, வட மாநிலங்களில் இருக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் இல்லாதது, தென் மாநிலங்களில் தொழில்துறைக்கு போதிய அளவு மனித வளம் இல்லாதது போன்றவையே பொதுவான காரணங்களாகக் கருதப்பட்டாலும், ஓர் ஊரில் நிலவும் அமைதியும், நேர்மறையான சமூகச் சூழல், பருவநிலை ஆகியவையும் பிற ஊரைச் சேர்ந்தவர்கள் வந்து நீண்ட காலம் தங்கத் தூண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

தென்னிந்திய நகரங்களில் வேலைவாய்ப்பு காரணங்களுக்காக அவர்கள் தங்கி இருந்தாலும், அவர்களுக்குள் குழுவாகச் சந்தித்துக்கொள்வது, உரையாடுவது என்று அவர்கள் பண்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் இருக்கிறார்கள்.

இந்தியாவின் பஞ்சு விலை சர்வதேச அளவை விட அதிகமாக இருப்பதால், தமிழக ஆடை உற்பத்திகள் விலையும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சர்வதேச ஏற்றுமதி என்று வரும்போது வங்கதேசம், வியட்நாம் போன்ற பிற ஆடை உற்பத்தி நாடுகளுடன் போட்டியிடுவதால் தமிழகத்திற்கு சிக்கல் உண்டாகிறது.

தமிழகத்தில் தேங்கும் தயாரிப்புகளை அப்படியே ஏற்றுமதி செய்வதற்கு பதிலாக, மதிப்புக்கு கூட்டல் செய்து வேறு உற்பத்திப் பொருட்களாக மாற்றி, ஏற்றுமதி செய்தால் அவற்றின்மூலம் இந்தியாவுக்கு கிடைக்கும் அந்நியச் செலாவணி 10 மடங்கு அதிகரிக்கும். அதற்கான மூலப் பொருட்கள் எளிதில் மட்டுமல்லாது குறைவான விலையிலும் கிடைக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.  என்கிறார் கோவையில் உள்ள நூற்பாலை சங்கத்தின் பொதுச் செயலாளர்  அருள்மொழி.

அண்மை ஆண்டுகளில் துகில் ஏற்றுமதிக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கப்பட்டதும் இன்னொரு பாதிப்பாக உள்ளது.

சரக்கு-சேவை விகிதத்தை சீராக்குவது, மூலப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்வது ஆகியவற்றுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால், வேகமான பாய்ச்சலைத் தொடங்க சாதகமான சூழலை எதிர்நோக்கியுள்ளது இந்திய துகில் துறை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,296.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.