Show all

மக்கள் கொன்று குவிக்கப் படும் சிரியா போர்! கூகுள் அனுதாப தேடலில் தமிழ்மக்கள் முதலிடம்

16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது.

இதுகுறித்து கூகுளில் அதிகம் தேடப்பட்டிருக்கிறது. முதன்மையாக சிரியா என்று ஆங்கிலத்திலும், தமிழிலும் அதிகமாக தேடப்பட்டு இருக்கிறது என்பது தற்போது தெரியவந்துள்ளது. 

அதன்பின் சிரியா புகைப்படங்கள், கணொளிகள், இறந்தவர்கள் எண்ணிக்கை, போர் காரணம், சேவ் சிரியா என்ற சொற்களும் அதிகமாக தேடப்பட்டு இருக்கின்றன.

இதில் தமிழகத்தை சேர்ந்த ஆவடிதான் முதல் இடம் பிடித்திருக்கிறது. ஆவடி பகுதியில் உள்ள மக்கள் அதிகமாக சிரியா என்று தேடி இருக்கிறார்கள். மூன்றாம் இடத்தில் சென்னையின் சிறுசேரி பகுதியும், 5-வது இடத்தில் சென்னையை சேர்ந்த காட்டாங்குளத்தூரும் இருக்கிறது.

8,9,10 ஆகிய இடங்களில் நாகர்கோவில், தஞ்சாவூர் ,மதுரை ஆகிய இடங்கள் இருக்கிறது. இவையெல்லாம் உலக அளவில் வந்த இடங்கள் என்பது குறிப்பிடதக்கது. தமிழர்கள்தான் இது பற்றி அதிகம் தேடி இருக்கிறார்கள்.

முதல் 50 இடத்தில் பெரும்பாலும் தமிழ்நாட்டு பகுதிகள்தான் இருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சிரியா குறித்து தேடி இருக்கிறார்கள். தமிழர்கள் இப்படி தேடி படித்ததற்கு நிறைய உளவியல் காரணங்கள் இருக்கிறது. 

முதன்மையாக, சிங்கள இராணுத்தால், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் துணையோடு தமிழ்மக்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராது கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப் பட்ட  இலங்கை போர் ஒரு காரணமாக கூறப்படுகிறது. 

ஈழத்தமிழர்கள் கொன்று குவிப்பில், நம்முடைய காங்கிரஸ் நடுவண் அரசு, திமுகவின் கழுத்தறுப்புகள் உள்ளீடாக இருந்ததால் தமிழகத் தமிழர்களின் கையறு நிலை பாற்பட்டு, இதிலும் இந்திய அரசின் ஒத்துழைப்பு இருக்குமோ என்கிற அச்சமும் காரணமாகக் கூறப்படுகிறது.

ஆனால் போரை முன்னின்று நடத்தும் ஈராக், ரஷியா, அமெரிக்க போன்ற நாடுகள் மிகவும் குறைவாகவே தேடி இருக்கின்றன. இந்த நாடுகள் அனைத்தும் 30-வது இடத்திற்கு பின்பே இருக்கிறார்கள். ரஷியா 63 இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,712 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.