Show all

13 ஆண்டுகாலமாக மேட்டூர்அணை அறங்கூற்று மன்றத்தில் வழக்கை சந்தித்து வரும் குஷ்பு

15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு கூறிய கருத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேட்டூரை சேர்ந்த பா.ம.க. வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த முருகன் 13ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் 2-வது குற்றவியல் நடுவர் அறங்கூற்றுமன்றத்தில் குஷ்பு மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் குஷ்புவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, மேட்டூர் அறங்கூற்றுமன்றத்தில் நடிகை குஷ்பு நேரில் அணியமாகி பிடியாணையைத் தளர்த்திக் கொண்டு திரும்பும்போது ஒரு கும்பல் குஷ்பு கார் மீது அழுகிய முட்டை, தக்காளி போன்றவற்றை வீசியது.

இது குறித்து மேட்டூர் வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் மேட்டூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தினகரன், பா.ம.க.வை சேர்ந்த அறிவழகன் உள்பட 41 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கு குறித்த விசாரணை மேட்டூர் குற்றவியல் அறங்கூற்றுமன்றம் எண்.1-ல் நடைபெற்று வருகிறது.

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (05.01.2018) இந்த வழக்கை விசாரித்த அறங்கூற்றுவர், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குஷ்பு மற்றும் விசாரணை அதிகாரியான அப்போதைய காவல் ஆய்வாளர், தற்போது மாவட்டக் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வரும் தினகரன் ஆகியோர் அறங்கூற்று மன்றத்தில் நேரில் அணியமாகி சாட்சியம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த வழக்கில், இன்று நடிகை குஷ்பு அணியமானதையொட்டி காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,711 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.