Show all

மாநில மொழிகள்தான் ஊடக எதிர்காலத்தை தீர்மானிக்கும்! டெய்லிஹண்ட் தலைவர் உமாங் பேடி:

06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: லண்டனில் தொடங்கியுள்ள 5வது ஆண்டு பிரிட்டன் - இந்தியா தலைமைத்துவ மாநாடு கடந்த திங்கள் முதல் வரும் வெள்ளி வரை நடக்கிறது. பிரிட்டனில் கடந்த திங்கள் அன்று இந்தியா- பிரிட்டன் இடையே இந்த உயர்நிலை கூட்டம் தொடங்கியது. 

இதில் இன்று மாலை நடந்த நிகழ்வில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் திரைப்பட எதிர்காலம் குறித்து பேசினார். டெய்லிஹண்ட் தலைவர் உமாங் பேடி இந்திய ஊடக படைப்பாற்றலின் எதிர்காலம் என்ற தலைப்பில்  பேசினார். முதன்மையாக ஊடகம் எப்படி எல்லாம் மாறியுள்ளது என்றார். மேலும், டெய்லிஹண்ட் தலைவர் உமாங் பேடி பேசிய போது, நீங்கள் இந்தியாவில் எந்த ஒரு ஊடக செய்தியை எடுத்து பார்த்தாலும் அது அதிக பட்சம் மாநில மொழிகளில்தான் உள்ளன. கிட்டத்தட்ட 90 விழுக்காடு செய்திகள், ஊடக விசயங்கள் மாநில மொழிகளில்தான் இருக்கின்றன. மாநில மொழிகள் இங்குதான் அதிக பங்கு வகிக்கிறது

இந்தியாவில் கிட்டத்தட்ட 20,00,00,000 மக்கள் மாநில மொழிகளில் பேசுகிறார்கள், மாநில மொழியில் இருப்பதை மட்டுமே விரும்புகிறார்கள். அவர்களின் தேவையை நிறைவேற்ற வேண்டும். தற்போது இருக்கும் தொழில்நுட்ப வசதி அதற்கு பெரிய அளவில் உதவுகிறது.

இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா முழுக்க பல மொழிகளில் மக்கள் பல விசயங்கள் நுகரத் தொடங்குவார்கள். நீங்கள் அவர்கள் மொழியில் பேசினால் அவர்களுக்கு புரியும். அவர்கள் உங்கள் பொருளை வாங்குவார்கள். என்று மாநில மொழிகளே ஊடகத்தை ஆளும் என்று தெளிவு படுத்தினார் டெய்லிஹண்ட் தலைவர் உமாங் பேடி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,824.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.