Show all

ஒருநாள் லீக் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான திட்டத்தை வெளியிட்டது ஐசிசி

கால்பந்து தொடரில் நடைபெறும் லீக் போன்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்த ஐசிசி ஏற்கனவே திட்டமிட்டு வந்தது. தற்போது ஐசிசி ஒருநாள் லீக் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான திட்டத்தை வெளியிட்டுள்ளது. 

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் 2019 முதல் 2021 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஐசிசி தரவரிசையில் முதல் 9 இடத்தில் இருக்கும் அணிகள் இந்த லீக்கில் விளையாடும். ஒவ்வொரு அணிகளும் தலா 6 தொடரில் விளையாட வேண்டும். இறுதியில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்திற்காக போட்டியிடும். இத்தொடரின் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானம் அல்லது புள்ளிகள் அடிப்படையில் முதல் இடம்பிடிக்கும் நாட்டில் நடைபெறும் என தெரிகிறது.  

அதேபோல், ஒருநாள் லீக்கில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் 13 அணிகளுடன், உலகக்கோப்பை லீக் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணியும் இடம்பெறும். மேலும் இந்த லீக் 2020 முதல் 2022 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் நடைபெறும் எல்லாத் தொடர்களும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் தொடருக்குள் வராது என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.