Show all

ஒழுக்கம் இல்லாத திறமையை அங்கிகரிக்க முடியாது! கூகுள் நிறுவனத்தில் 48 பேர் நீக்கம்

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாலியல் புகார்கள் மீது கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்: 

கூகுள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் புகார்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது. பணியாளர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக வந்த பாலியல் புகார் காரணமாக இதுவரை 48 க்கும் அதிகமானவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் மூத்த மேலாளர்கள் மற்றும் அதற்கு மேல் பதவியில் இருப்பவர்கள் ஆவர். இவர்கள் யாருக்கும் பணிக்கொடை ஏதும் ஏதும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் புகார் காரணமாக, கூகுளின் ஆன்டிராய்டு செல்பேசி அமைப்பை உருவாக்கிய ஆன்டி ரூபின் வெளியேற்றப்படும் போது அவருக்கு ஒன்பது கோடி டாலர்கள் பணிக்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,953.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.