Show all

சவுதி அரேபியா தட்டிச் செல்லும் பெருமை: பெண் ரோபோவுக்கு குடியுரிமை

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பல்வேறு நாடுகளில் வாழும் வெளிநாட்டினருக்கு குடியுரிமை கிடைப்பதில் கடும் பிரச்சினையும், சிக்கலும் உள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியா பெண் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சோபியா என பெயரிடப்பட்ட அந்த ரோபோவை ஹாங்காங் கம்பெனியான ‘ஹன்சன் ரோபோடிக்நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹன்சன் வடிவமைத்துள்ளார். இது பெண் போன்று மிக இனிமையாக பேசுகிறது. மனிதர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோ அமெரிக்க நடிகை ஆட்ரி ஹெப்பர்ன் போன்ற தோற்றத்தில் உள்ளது. சவுதி அரேபியா அரசின் குடியுரிமை பெற்ற பின் சோபியா ரோபோ செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தது. அப்போது, என்னை ஒரு தனித்தவத் தன்மையுடன் சிறப்புடன் உருவாக்கியதற்காக பெருமைப்படுகிறேன். என்னை உருவாக்கியவர்களை மதிக்கிறேன். நான் மனிதர்களுடன் வாழவும், பணி புரியவும் விரும்புகிறேன் என்று கூறியது. மனிதர்களின் நடவடிக்கைகளை அறிந்து அவர்கள் போன்று செயல்படுகிறேன். எனக்கு அளிக்கப்பட்டுள்ள செயற்கை அறிவின் மூலம் சிறப்பாக வாழ்ந்து மனித குலத்துக்கு நன்மை செய்ய விரும்புகிறேன் என்று பதில் அளித்தது. சோபியா ரோபோவின் பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

உலகிலேயே ரோபோவுக்கு முதன் முறையாக குடியுரிமை வழங்கிய நாடு என்ற பெருமையை சவுதி அரேபியா பெற்றுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.