Show all

கலைத் துறையிலிருந்தே தமிழகம் முதல்வரைத் தேடுகிறதென்கிற நப்பாசையில் ஒரு கலைத்துறையே வருகிறது

07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த ஓராண்டாகவே ஊடகம் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் தடதடக்கும் செய்தி, கலர்ஸ் ஒளியலைவரிசை தமிழில் வரப்போகிறதாமே எனத் தொடங்கி, ஆர்வத்தோடு ஆளாளுக்கு அவர்களுக்குத் தெரிந்த அல்லது தெரியாத தகவல்களையும் கலந்து கட்டி புதுப்புது வண்ணம் தீட்டிக்கொண்டிருந்தார்கள்! எல்லாருடைய யூகங்களுக்கும் விடையாக இன்று முதல் ஒளிபரப்பாகத் தொடங்கி விட்டது. வேறு மொழிகளில் அதகளப்படுதிக் கொண்டிருக்கும் ஒளியலைவரிசை என்பதால் எதிர்பார்ப்பும் எகிறிக்கிடக்கிறது!

கலர்ஸ் தமிழ் என்பது வயாகாம்18 குழுமத்தால் ஒரு தமிழ் தொலைக்காட்சி சேவை ஆகும்.

இது நம்ம ஊரு கலரு என்ற கொள்கை முழக்கத்துடன் தமிழர் பண்பாட்டிற்கு தலையாயத்துவம் அளிக்கும் வகையில் மண் மணம் மாறாத தமிழ்த் தொடர்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஒளிபரப்பப் போகிறதாம்.

மேலும் கலர்ஸ் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நாகினி-2 மற்றும் காக்கும் தெய்வம் காளி ஆகிய தொடர்களைத் தமிழில் குரல்மாற்றம் செய்து ஒளிபரப்புகிறது.

கலர்ஸ் தமிழின் விளம்பரத் தூதராக தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா செயல்படுகிறார் ஏழழவ என்ற செயலி மூலமாக கலர்ஸ் தமிழ் நிகழ்ச்சிகள் அனைத்தையும் மிடுக்குப்பேசியில் காண முடியும்.

வேலுநாச்சி :

சிலம்பத்தில் தன்னுடைய தந்தை வழியைப் பின்பற்றி முன்னெடுத்துச் செல்லும் ஒரு வீரமிக்க பெண்ணாக தன்னை மாற்றிக் கொள்ளும் வேலுநாச்சி என்ற இளம்பெண்ணின் உத்வேகக் கதையாகும். நேரம்: 18.30

நாகினி-2:

ஹிந்தித் தொடரின் தமிழாக்கம்; தன் தாயைக் கொன்ற எட்டு கொலைகாரர்களைப் பழிவாங்குவதற்கும் நாகமணியைக் காக்கவும் போராடும் ஷிவாணி என்ற இச்சாதாரி நாகினியின் கதையாகும். நேரம்: 19.00

சுpவகாமி:

ஒரு வெற்றிகரமான இந்திய காவல்பணித்துறை அதிகாரியாக தன்னுடைய மகனை வளர்த்து உருவாக்குவதற்கு, சமுதாயத்தில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் சிவகாமி என்ற இளம் பெண்ணின் வீரக் கதையாகும். நேரம்: 20.00

எங்க வீட்டு மாப்பிள்ளை:

நடிகர் ஆர்யா 16 பெண்களில் தனக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் ஒரு புதுமையான நிகழ்ச்சி. நேரம்: 20.30

பேரழகி:

தோலின் நிறத்தைச் சுற்றி ஒரே மாதிரியாக வரும் பாணியை மாற்றி, ஒரு பிரபலமான நபராக உருவாக வேண்டும் என்பதற்காக வரக் கூடிய அனைத்து பிரச்சினைகளையும் எதிர்த்து போராடக் கூடிய ஒரு சாதாரண சிறுமியின் வாழ்க்கைக் கதையைக் கூறுகின்றது. நேரம்: 21.30

சனி மற்றும் ஞாயிறுகளில்:

காக்கும் தெய்வம் காளி: ஹிந்தித் தொடரின் தமிழாக்கம். பார்வதி தேவியின் அம்சமும் உக்கிர தெய்வமுமான மகாகாளியின் கதையைக் கூறும் ஒரு பக்திக் காவியம் ஆகும். நேரம்: 19.00

கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்: குழந்தைகளுக்கு உள்ள இயல்புக்கு மீறிய வியத்தகு திறமைகளை கொண்டாடுவதற்கு ஒரு மேடையை வழங்கும் ஒருவகை உத்வேகமான, கல்வி புகட்டக் கூடிய மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்ச்சி ஆகும். இதை நடிகர் சிவா தொகுத்து வழங்குகிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,703

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.