Show all

அறிவீனமானது மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையென முன்னதாக கணித்தவருக்கு நோபல்பரிசா

இன்று 22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடியின் பணமதிப்பிழப்பு திட்டத்தை கடுமையாக எதிர்த்த ரகுராம் ராஜன் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறக்கூடும் என்று கூறப்படுகிறது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் பெயர் உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்படுகிறது.

தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு திட்டத்தை கடுமையாக எதிர்த்தவர் ரகுராம் ராஜன். 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை செல்லாமல் செய்வதால்;, தற்போது பெரும் பாதிப்பு மட்டுமே ஏற்படும் என்று முன்கூட்டியே எச்சரித்தவர் ரகுராம் ராஜன்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பணமதிப்பிழப்பு பற்றி நடுவண்; அரசு ரகுராம் ராஜனிடம் கருத்து கேட்டபோது இது தேவையில்லாத வேலை என்று தெரிவித்தவர் அவர். ரகுராம் ராஜன் எச்சரித்தபடியே பண மதிப்பிழப்பு திட்டத்தால் பாதிப்பு தான் அதிகம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரகுராம் ராஜனுக்கு நோபல் பரிசு அறிவிக்கப் பட்டு விடுமானால், மோடியின் அறிவீனமான பணமதிப்பிழப்பு நடவடிக்கை, உலகம் முழுவதும் படுகேவலமாக கிழிகிழி என்று கிழிக்கப் படும் என்ற அச்சத்தில் இருக்கிறது பாஜக மேல்மட்ட வட்டாரம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.