Show all

இந்தியாவுக்கு வெளியே அயலவர் ஆதிக்கத்திற்கு பறிபோன தமிழர் மண்கள் மாலைத்தீவு, இலங்கையில் மோடி! தமிழர்களுடன்...

மாலைத்தீவும் சரி, இலங்கையும் சரி, தமிழர் மண்களாய் இருந்தவை- வந்தேறிகள் ஆதிக்கத்திற்கு வயப்பட்டவைகளே. இரு மண்களிலும் நிறைய நடந்து முடிந்து விட்டன. இதுவரை இந்தியா வெளியுறவுக் கொள்கை தமிழரை காக்க வில்லை. மோடியின் இந்த வருகை தமிழர்க்கு நன்னிலை நல்குமா? ஏக்கத்தில் அந்நிலத் தமிழ்ப் பேரளர்கள்.

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும், இலங்கையில் நேற்று சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைகலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட சிலர் இதில் கலந்துக்கொண்டுள்ளனர்.

சுமார் 15 நிமிடங்கள் மாத்திரமே இந்தியத் தலைமைஅமைச்சருடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு வழங்கப்பட்ட நிலையில், தமது உரிய கலந்துரையாடல்களை நடத்துவதற்கு இது போதுமான காலமாக அமையவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய இந்தியத்;தலைமைஅமைச்சர் மோடியிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் பிரச்சினை குறித்து விரிவாக கலந்துரையாட வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும், தமக்கு அதற்கான சந்தர்ப்பத்தை புதுடெல்லியில் ஏற்படுத்தி தருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த இந்திய இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி, தான் விரைவில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உறுதியளித்ததாக அக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

உலகளாவி இந்தியாவற்கு சில ஆதாயங்களைத் தேடித்தந்திருக்கிற வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழினப் பாதுகாப்பில் அக்கறை காட்டக்கூடும் என்று உலகத் தமிழர்கள் நம்புகிறார்கள். மோடியும் ஜெயசங்கரும் ஆவன செய்வார்களா!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,179.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.