Show all

போராளியாக ஒரு சிறுவன் மரணதண்டனைக்கு உள்ளாகியுள்ளான்! சவூதியில்.

உலகம் முழுவதும் முகமதியர்களில் இரண்டு பிரிவினர் காணப்படுகின்றனர். முகமது நபிக்குப் பின் யாரை தலைமை ஏற்பது என்ற அடிப்படையில் உருவானவைகள் தாம் அந்த இரண்டு பிரிவுகள் சியா மற்றும் சன்னி. இந்த இரண்டு பிரிவினரிடையேயும் சண்டையும் சச்சரவுகளும் தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருக்கின்றன.

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சியா பிரிவினரை அரசு நடத்தும் விதம் சரியில்லை எனக் கூறி சவூதி அரச குடும்பத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில், முழுக்குடும்பம் ஒன்றும் ஈடுபட்டிருந்தது. அந்தக் குடும்பத்தில் முர்தஜா குரேய்ரிஸ் எனும் சிறுவன் பெற்றோருடன் மிகச்சிறு அகவையில் இருந்தே கலந்து கொண்டிருந்தான்.

அப்படிப்பட்டதொரு போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக அச்சிறுவனின் மூத்த சகோதரர் ஏற்கெனவே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சிறுவனின் தந்தையும் மற்றொரு சகோதரரும் சிறை சென்றுள்ளனர்.

இதேபோன்றதொரு போராட்டத்தில் முர்தஜா பங்கேற்றமைக்காக, கைது செய்யப்பட்டார். மூன்றரை ஆண்டுகள் விசாரணைக் கைதியாகவும், பின் தீவிரவாதம், போராட்டத்தில் பங்கெடுத்தல், காவல்துறையினரைத் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றவாளியாகவும் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில், தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,179.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.