Show all

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு கோலாலம்பூர் சோமசுந்தரம் ரூ.ஒருகோடி அளித்துள்ளார்.

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகின் சிறந்த பல்கலைக் கழகங்களில் ஹார்வர்டு பல்கலைக் கழகமும் ஒன்று.

      இதில் தமிழ் மொழியைத் தவிர மற்ற செம்மொழிகளுக்கு இருக்கை இருக்கிறது. ஆனால், தமிழ் மொழிக்கு இருக்கை இல்லை. எனவே, தமிழ் மொழிக்குப் பல்கலைக்கழகத்தில் இருக்கை பெற வேண்டும் என்பதற்காக உலகில் பல்வேறு இடங்களில் இருக்கும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் நன்கொடை அளித்து வருகிறார்கள்.

      தமிழ் இருக்கைக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். அதை தொடர்ந்து, நடிகர் கமல்ஹானும் 20 லட்சம் வழங்கினார். இவர்களைத் தொடர்ந்து பலரும் நன்கொடை அளித்துவரும் வேளையில், கோலாலம்பூரில் தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்க விஸ்மா துன் சம்பந்தன் மாளிகையில் நேற்று (22.11.2017) நடைபெற்ற நிகழ்ச்சியில் மலேசியா கோலாலம்பூரில் வசிக்கும் சோமசுந்தரம் 1,60.000 டாலர் (இந்திய மதிப்பு 1 கோடி) காசோலையை ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கை பொறுப்பாளர்களில் ஒருவரான ஆறுமுகத்திடம் வழங்கினார்.

      -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,615

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.