Show all

நமது மொழியா! செவ்வாய் கோளில் கேட்ட ஒலியை உலகில் அனைவரும் கேட்கும் விதமாக வலையொளி தளத்தில் நாசா வெளியிட்டுள்ளது

24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செவ்வாய் கோளில் முதல் முதலாக ஒலியை கேட்க முடிந்ததிருக்கிறது எனவும் இன்சைட் விண்கலம் அதனைப் பதிவு செய்து அனுப்பியுள்ளது எனவும் நாசா தெரிவித்திருந்தது.

அந்த ஒலி உரக்கக் கேட்கக்கூடியதாக இல்லை என்றும் காற்றின் அதிர்வலைகளே ஒலியாக பதிவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் வடமேற்கில் இருந்து தென்கிழக்கை நோக்கி, மணிக்கு 10 முதல் 25 மைல் வேகத்தில் இந்த அதிர்வலை பதிவாகியுள்ளது. 

இது போன்ற சின்ன சின்ன ஒலிகள்கூட கோள்கள் ஆராய்ச்சியில், மிகவும் உதவியாக இருக்கும். இன்சைட் அனுப்பியது போன்ற ஒலியை எதிர்பார்க்கவே இல்லை. என நாசா விஞ்ஞானி புரூஷ் பெனர்ட் வியந்துள்ளார். 

இன்சைட் அனுப்பிய ஒலியை உலகில் அனைவரும் கேட்கும் விதமாக வலையொளி (youtube) தளத்தில் நாசா வெளியிட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,997.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.