Show all

கண்டெடுத்த பரிசுச்சீட்டிற்கு கிடைத்தது பரிசு ரூ12,70,00,000! அமெரிக்காவில்

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவின் முதன்மை விடுமுறை நாட்களில் ஒன்றான நன்றி தெரிவிக்கும் நாளை கொண்டாடுவதற்கு விருந்தினர்கள் வருவதற்கு முன்னர் வீட்டை தூய்மை செய்துகொண்டிருந்தபோது எதேச்சையாக சில பரிசுச்சீட்டுக்கள் கிடைத்தனவாம் டினா எரென்பெர்க்கு இணையர்களுக்கு.

கிடைத்த பரிசுச்சீட்டுகளை ஆராய்ந்து பார்த்தபோது, அதில் இருந்த சீட்டு ஒன்றுக்கு 12.7 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது தெரியவந்ததாக அந்த இணையர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பரிசுச்சீட்டுகள் காலாவதியாவதற்கு இரண்டு கிழமைகளே உள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுதான் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகிற, இயற்கை தரும் கொடையா!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,982.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.