Show all

கொலையில் முடிந்தது! இணையத் தொடர்பில் ஏற்பட்ட, சிறுவனின் ஒருதலைக்காதல்; தொடர்பின் இடைவெளி 6276 கிலோ மீட்டர்

06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உருசியாவைச் சேர்ந்த கிரில் வொல்ஸ்கி என்ற 16 அகவைச் சிறுவன், மாஸ்கோவில் உள்ள கிறிஸ்டினா என்ற சிறுமியுடன் இணையத் தொடர்பில் நட்புடன் பழகிவந்துள்ளான். நாளடைவில் இவனுக்கு கிறிஸ்டினா மீது காதல் வர, இவனது காதலை கிறிஸ்டினா ஏற்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கிரில் தனது சேமிப்பில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு பெற்றோருக்கு தெரியாமல் மாஸ்கோ பயணித்துள்ளான். 6 ஆயிரத்து 276 கிலோ மீட்டர் தூரம் பயணித்த கிரில், சிறுமையைத் தேடிப் பிடித்து, சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். மேலும், யாரும் கண்டுபிடித்துவிட கூடாது என்பதற்காக கழிவுநீர் தொட்டியில் சிறுமியின் உடலை மூழ்கச்செய்துள்ளான்.

சிறுமி காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இந்தச் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இணையத் தொடர்பில் ஏற்பட்ட நட்பு இரண்டு சிறுவர்களின் வாழ்வை சூறையாடியிருப்பது, மிகுந்த வருத்தமளிப்பதாக இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,949.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.