Show all

11 வருடங்களாக புற்றுநோயுடன் போராடும் WWE வீரர் ரோமன் ரெய்ன்ஸ்

WWE வீரரான ரோமன் ரெய்ன்ஸ் கடந்த 11 வருடங்களாக தனக்கு புற்றுநோய் இருப்பதாகவும், அதன் தாக்கம் தற்போது அதிகரித்திருப்பதால் நான் WWE-ஐ விட்டு ஓய்வில் செல்கிறேன் என்று கூறி அணைத்து ரசிகர்களையும் அதிர்ச்சியாக்கியுள்ளார். 

WWE என்பது, பொழுதுபோக்கிற்காக நடத்தப்படும் மல்யுத்த நிகழ்ச்சியாகும். WWE  நிறுவனம் ரா மற்றும் ஸ்மேக்டவுன் என இரண்டு மிக முக்கியமான நிகழ்ச்சியை வாரந்தோறும் நடத்தி வருகிறது. இதில் "ரா" நிகழ்ச்சியில் விளையாடி வருவபவர் ரோமன் ரெய்ன்ஸ், மேலும் தற்போது யுனிவர்சல் சாம்பியனாகவும் இருக்கிறார். நேற்று நடைபெற்ற "ரா" நிகழ்ச்சியில் எப்போதும் போல் எதோ ப்ரோமோ கொடுக்க வருகிறார் என்று நினைத்தவர்களுக்கு, நான் கடந்த 11 வருடங்களாக லுகிமியா எனப்படும் ரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜை புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் என அதிர்ச்சி செய்தியை கூறினார். மேலும் தற்போது அந்த நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால், நான் சிகிச்சைக்காக wwe-வில் இருந்து விலகுகிறேன் என்றும் கூறினார். 

மேலும் இது நான் ஓய்வு பெறும் பேச்சு அல்ல. நான் நிச்சயம் மீண்டு வருவேன். மீண்டும் உங்களை சந்திப்பேன் என கூறி ரிங்கை விட்டு வெளியேறினார். இன்றைய இளம்தலைமுறையினருக்கு மிகவும் பிடித்த வீரரிகளில் இவர் ஒருவர், அதேபோல் வெறுக்கப்பட்ட வீரர்களில் இவர் தான் அதிகம். ஆனால், உலகம் முழுவதும் உள்ள அணைத்து மல்யுத்த ரசிகர்களின் இன்றைய ஒரே பிரார்த்தனை ரோமன் ரெய்ன்ஸ் மீண்டு வர வேண்டும் என்பதே. ரோமன் ரெய்ன்ஸ் பிரபல அநோய் எனும் மல்யுத்த குடும்பத்தை சேர்ந்தவர். ரிகிஷி, டோங்கா கிட், யோகோசுனா, உமாகா, உசோஸ் மற்றும் தற்போது ஹாலிவுடை கலக்கி வரும் தி ராக் எனும் டுவைன் ஜான்சன் ஆகியோர் இவரது உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.