Show all

தீயாய் பரவி, இணையத்தைக் கலக்கும் காணொளி! விழுந்துகிடக்கும் ஆள், அருகே அசையும் கருப்பு உருவம். யூகிக்க முடியவில்லை.

06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அச்சுறுத்தும் வகையிலான கருப்பு உருவம் கொண்ட ஒரு காணொளி முகநூலில் தீயாகப்  பரவி வருகிறது. சாலையோரத்தில் ஒருவர் அடிபட்டு விழுந்து கிடப்பது போலவும், அந்த நபர் அருகே ஒரு கருப்பு உருவம் அசைவது போலவும் உள்ளது அந்தக் காணொளி. சட்டென பார்ப்பவருக்கு அது ஏதோ பேய் உருவம் போல தெரியும். ஆனால், அந்த உருவம் எல்லோர் கண்களுக்கும் தெரிகிறது. சிலர் வீடியோ எடுப்பதை பார்க்க முடிகிறது. அந்த உருவம் கருப்பு நாய் போன்ற தோற்றத்தோடு உள்ளது. ஆனால் இது என்ன உயிரினம், அல்லது வேறு எதுவுமா என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. இந்த காணொளியை  பகிர்ந்தவர் தமிழ் உட்பட பல மொழிகளில் இது என்ன என்ற கேள்வியைக் கேட்டுள்ளார். Manju Gkb என்ற  முகநூல் பக்கத்தில் இந்த காணொளி காணப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,949.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.