Show all

653.718கோடி ரூபாய் இந்தாண்டு சம்பளம் பெற்றுள்ளார் ஆப்பிள் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்

13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக் அவர்களுக்கு இந்த ஆண்டு இரட்டை யோகம் அடித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் சில தயாரிப்புகள் வெற்றி அடையாத நிலையில், கடந்து ஆண்டு வருவாய் அதிகளவில் சரிந்து, வர்த்தகத்தில் பின்தங்கியது.

இத்தகைய சூழ்நிலையில் டிம் குக், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனின் புதிய தயாரிப்புகளைச் சரியான திட்டமிடல் உடன் அறிமுகம் செய்து சந்தையில் வெற்றிபெற்றார்.

இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் வருமானம் கடந்த ஆண்டை விட அதிகமானது. எப்போதும் இல்லாத அளவிற்குக் கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் வருமானம் அதிகளவில் குறைந்து காணப்பட்டது

இதன் காரணமாக, டிம் குக் குறைவான சிறப்பு ஊதியமே கடந்த ஆண்டு பெற்றார். இந்த ஆண்டில் நிறுவனம் அதிகப்படியான வருவாய் ஈட்டிய காரணத்தால் டிம் குக் அவர்களின் சிறப்பு ஊதியம் 74 விழுக்காடு உயர்ந்தது.

சிறப்பு ஊதியமாக டிம் குக் இந்த ஆண்டு சுமார் 9.33 மில்லியன் டாலரை பெற்றுள்ளார். ஏற்கனவே டிம் குக்கிற்காக அறிவிக்கப்பட்ட 89.2 மில்லியன் டாலர் அளவிலான பங்குகளையும் பெற்றுள்ளார். ஆகமொத்தம் இந்த ஆண்டு மட்டும் டிம் குக் சுமார் 102 மில்லியன் டாலர் வரையிலான தொகையைச் சம்பளமாகப் பெற்றுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் இது 653.718 கோடி ரூபாய் ஆகும்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,650

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.