Show all

இலங்கையில் கடும் அரசியல் சிக்கல், குழப்பம்! சம்பந்தமில்லாமல் ராஜபக்சே தலைமை அமைச்சராக்கப் படப் பட்டுள்ளது

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை சட்டப் படி ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக பதவி வகிக்க முடியாது. மூன்றாவது முறையாக அதிபர் பதவியைக் கைப்பற்ற, சட்டத்தை மாற்றி கடந்த முறை  ராஜபக்சே அதிபர் பதவிக்கு போட்டியிட்ட போது, மக்கள் வாய்ப்பளிக்க வில்லை. 

இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது ராஜபக்சே தோல்வியடைந்த நிலையில், இலங்கை விடுதலை கட்சி, ஒருங்கிணைந்த தேசிய கட்சி, இணைந்து ஆட்சி அமைத்தன. சிறிசேனா அதிபராக பதவி ஏற்றார். ரணில் விக்ரமசிங்கே தலைமை அமைச்சராகப் பதவி ஏற்றார்.

அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சே கட்சி அதிகமான இடத்தில் வெற்றி பெற்றது. இதனால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் சிறிசோன கட்சி அரசில் இருந்து இன்று திடீரென விலகியது. அத்துடன் ரணில் விக்ரமசிங்கேவை தலைமை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார் சிறிசேனா. உடனடியாக அதிபர் சிறிசேனா முன்னிலையில் ராஜபக்சே தலைமை அமைச்சராக்கப் பட்டது.

இலங்கைக்கு நான்தான் தலைமை அமைச்சர், அரசியலமைப்பு சட்டத்தின்படி என்னை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என ரணில் விக்கரமசிங்கே தெரிவித்துள்ளார். 

இதனால் ரணில் விக்ரமசிங்கே தனது கட்சி ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே இலங்கைக்கு நான்தான் தலைமை அமைச்சர். நான் தலைமை அமைச்சராக நீடிப்பேன். அரசியலமைப்பு சட்டத்தின்படி என்னை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் ராஜபக்சேவை தலைமை அமைச்சராக நியமித்தது அரசியல் அமைப்புக்கு எதிரானது. இது ஜனநாயக விரோத சதி என்றார். இவ்வாறாக இலங்கையில் கடும் அரசியல் சிக்கலும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே தலைமை அமைச்சராக பதவியேற்ற ராஜபக்சேவுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியால், என் நெருங்கிய நண்பர் ராஜபக்சே இலங்கை தலைமை அமைச்சராகியுள்ளதற்கு என் வாழ்த்துகள் என கீச்சு பதிவிடப் பட்டுள்ளது: இந்திய உளவு அமைப்பால் இலங்கை அதிபர் உயிருக்கு ஆபத்து என்ற ஒரு கருத்து கிளம்பி மறுக்கப்  பட்ட நிலையில், சுப்பரமணிய சாமியின் இலங்கை அரசியல் சிக்கல் குழப்பத்தின் மீதான தலையீடு உலக அளவில் பரபரப்பாகியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,952.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.