Show all

தொடர்வண்டி மறியல் போராட்டம் திரும்பப் பெற்ற நிலையிலும், மாபெரும் போராட்டம் நடத்த முடிவு; மீனவர்கள் பேரணி

22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 ஓகி புயலால் மாயமான 1013 மீனவர்களையும் மீட்க வலியுறுத்தி குமரி மாவட்டம் குழித்துறையில் மக்கள் நடத்தி வந்த 14 மணி நேர தொடர்வண்டி மறியல் போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது.

      மீனவர்களைச் சந்திப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்திருப்பதாக குமரி மாவட்ட ஆட்சியர் சஜன் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

      இதையடுத்து கன்னியாகுமரி மண்டல பங்குத்தந்தை கேட்டுக்கொண்டதையடுத்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் கோரிக்கைகளை தமிழக அரசு நிராகரித்திருப்பதால் அவை நிறைவேறும் வரை போராட்டத்தை முடிக்க மாட்டோம் என்று உறுதிப்பட அவர்கள் தெரிவித்துள்ளனர்.

      இதனையடுத்து அரசு சார்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் மீனவ கிராம மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி விட்டு வீடு திரும்பினர். இதனையடுத்து குழித்துறை வழியாக குமரியிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட கன்னியாகுமரி விரைவு தொடர்வண்டி உட்பட அந்த வழியாக செல்லும் தொடர்வண்டி போக்குவரத்து தொடங்கியது.

      இந்நிலையில் குமரி மாவட்டம் குளச்சலில் மீனவர்கள் இன்றும் மாபெரும் போராட்டத்தில் ஈடுப்படவுள்ளனர். இதற்காக குளச்சல் சுற்று வட்டாரத்தில் உள்ள குறும்பனை, வானியக்குடி, சைமன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஊரவலமாக  குளச்சல் பகுதியை நோக்கி புறப்பட்டனர். இதனால் குளச்சலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

      -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,630

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.