Show all

குடும்பஅடையாள மிடுக்கு அட்டை இல்லையெனினும் தொடர்ந்து பொருட்கள் வழங்கப்படும்: தமிழக அரசு

22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: வருகிற 17,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119 முதல் (01.01.2018) குடும்பஅடையாள மிடுக்கு அட்டை இல்லாதவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படமாட்டாது என்பது பொய்யான தகவல் என்று தமிழக அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் நடைபெறக்கூடிய குளறுபடிகள், முறைகேடுகளை தவிர்க்கும் விதமாக குடும்பஅடையாள மிடுக்கு அட்டை வழங்கப்பட்டன.

தற்போது வரை தமிழகம் முழுவதும் 60 விழுக்காட்டு மக்களுக்கு குடும்பஅடையாள மிடுக்கு அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற 17,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119 முதல் (01.01.2018) குடும்பஅடையாள மிடுக்கு அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என்றும், பழைய குடும்பஅட்டைகளை வைத்திருப்பவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படக்கூடாது என்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால், இந்தத் தகவலை பொது விநியோகத்துறை மறுத்துள்ளது. அனைத்து மக்களுக்கும் குடும்பஅடையாள மிடுக்கு அட்டை வழங்கப்பட வேண்டும் என்றுதான் உத்தரவிடப்பட்டதே தவிர குடும்பஅடையாள மிடுக்கு அட்டைகளுக்கு மட்டும்தான் பொருட்கள் வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்படவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

எனவே பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,630

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.