Show all

கபசுரக் குடிநீர் தரமானதுதானா! பயன்படுத்தும் முன் கவனிக்க சித்த மருத்துவர்கள் அறிவுறுத்தல்

விருப்பம் போல் கபசுரக்குடி நீரைக் குடிக்கக் கூடாது. அதிகமானால் வயிற்றுப்புண் ஏற்பட வாய்ப்பு உண்டு. சித்தமருத்துவர் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது.

25,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சித்தமருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன. அதனால்தான் கொரோனாவில் பாதிக்கப்பட்ட, பல நோயாளிகள் குணமாகி வருகின்றனர்.

சித்தமருத்துவத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும், மூலிகை மருந்துகள் உள்ளன. கபசுரக்குடி நீரில் அந்த வகைக்கு மருந்துகள் கலந்துள்ளன. அதனால் யாரும் கபசுரக்குடிநீர் குடிப்பதில் தவறில்லை. ஆனால் அது சரியான மருந்தாக இருக்க வேண்டும். மருந்து கடைகளில் வாங்கும் கபசுரக்குடிநீர் பொடி, அரசு உரிமம் பெற்ற மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதா என, பார்த்து வாங்க வேண்டும்.

விருப்பம் போல் கபசுரக்குடி நீரைக் குடிக்கக் கூடாது. அதிகமானால் வயிற்றுப்புண் ஏற்பட வாய்ப்பு உண்டு. இரண்டு குவளை தண்ணீரில், அரை மேசைக்கரண்டி மருந்துத்தூள் போட்டு, ஒரு குவளை அளவுக்கு காய்ச்சி வடிகட்டி, அன்றாடம் ஒரு குவளை குடிக்கலாம். காய்ச்சல், சளி இருப்பவர்கள் காலையும், மாலையும் குடிக்கலாம். சித்தமருத்துவர் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது.

கபசுரக்குடிநீரில் 15 வகையான மருத்துவப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்திக்கு மூன்று வகை மருந்துகள், நுண்நச்சுக்கு எதிராக மூன்று வகை மருந்துகள், உடல் சூடு தணிக்க மூன்று வகை மருந்து என, பல வகை நோய்களுக்கான மூலிகைகள் இதில் சேர்க்கப்படுகின்றன. கபசுரக் குடிநீரை சூடாகதான் குடிக்க வேண்டும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.