Show all

நூற்றிப் பதினேழு நாட்களுக்குப்பின் துடுப்பாட்டம் தொடங்கியது!

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் விளையாட்டு இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. மழை பெய்ததால் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு போட்டி தொடங்கியது.

24,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நூற்றிப் பதினேழு  நாட்களுக்குப்பின் துடுப்பாட்டம் தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் விளையாட்டில் இங்கிலாந்து பூவா தலையா வென்று மட்டை சுழற்றுதலைத் தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் விளையாட்டு இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. மழை பெய்ததால் மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை.

மதிய உணவு இடைவேளைக்குப்பின் போட்டி தொடங்கியது. பூவா தலையா வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ் மட்டை சுழற்றுதலைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்படவில்லை.

1. ரோரி பேர்ன்ஸ், 2. டொமினிக் சிப்லி, 3. ஜோ டென்லி, 4. கிராவ்லி, 5. பென் ஸ்டோக்ஸ், 6. ஒல்லி போப், 7. பட்லர், 8. ஜாஃப்ரா ஆர்சர், 9. மார்க் வுட், 10, ஜேம்ஸ் ஆண்டர்சன், 11. டொமினிக் பெஸ். ஆகியோர் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றனர்.

1. ஜான் கேம்ப்பெல், 2 கிரேக் பிராத்வைட், 4. ஷமர்த்  ப்ரூக்ஸ், 5. ஷாய் ஹோப், 6. ராஸ்டன் சேஸ், 7. பிளாக்வுட், 8. டவ்ரிச், 9. ஜேசன் ஹோல்டர், 10, அல்ஜாரி ஜோசப், 11. கேமர் ரோச், 11. கேப்ரியல் ஆகியோர் வெஸ்ட் இன்டிஸ் அணியில் இடம் பெற்றவர்கள்.

முதல் ஓவரை கேமர் ரோச் வீசினார். இந்த ஓவரில் ரோரி பேர்ன்ஸ் ஓட்டம் எடுக்கவில்லை. 2-வது ஓவரை கேப்ரில் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் 4-வது பந்தில் சிப்லி வெளியேறினார்.

இங்கிலாந்து 3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு ஒரு ஓட்டம் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது.

சவுத்தாம்ப்டன் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள் மண்டியிட்டு பிளாக் லிவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இருவர், இரண்டு நடுவர்கள் மேலும், பெஞ்ச் வீரர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்கள் என அனைவரும் ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ இயக்கத்திற்கு மண்டியிட்டு நின்று தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும், இரண்டு அணி வீரர்களும் பிளாக் லிவ்ஸ் மேட்டர் இலச்சினை பொறித்த டி-சர்ட் உடன் விளையாடுகின்றனர்.

முன்னதாக, அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் கடந்த மே மாதம் வெள்ளையின காவல்துறை அதிகாரியால் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் (46) கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து அந்நாடு முழுக்க இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றது.

ஜார்ஜ் பிளாய்டின் மரணத்தைத் தொடர்ந்து ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ என்னும் இயக்கமாக மாறி உலக அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

விளையாட்டு வீரர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பிரிட்டனில் கொரோனா அச்சம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட பிரிமீயர் லீக் கால்பந்து தொடர் ஜூன் 17-ந்தேதி மீண்டும் தொடங்கியது. இப்போட்டியின்போது வீரர்கள் அனைவரும் மண்டியிட்டு, பிளாக் லிவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அத்துடன் அனைவரும் பிளாக் லிவ்ஸ் மேட்டர் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டிஷர்ட்டுகளை அணிந்திருந்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.