Show all

பாஜகவோடு கூட்டு வைத்தால் அதிமுகவின் கதை முடிந்து விடுமா

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் இப்போதுள்ள அரசியல் சூழலை நாடே கவனித்துக் கொண்டுள்ளது. செயலலிதாவின் மரணத்துக்குப் பின் அதிமுக ஆட்சி தொடர்ந்தாலும், அது மக்களின் மதிப்பைப் பெற்ற ஆட்சியாக இல்லை என்ற கருத்து நிலவுகிறது. எனவே மக்கள் மனதை அறிய மத்திய உளவுத்துறை அதிகாரிகள், அவசர கருத்துக் கணிப்பு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கருத்துக் கணிப்புகளில் கிட்டத்தட்ட 89 விழுக்காடு பேர் அதிமுக அரசு மீது, முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்;னீர், மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இனியொரு முறை அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க மாட்டோம் என 80 விழுக்காடு பேர் தெரிவித்துள்ளனர். 46 விழுக்காடு பேர், தி.மு.க.,வை ஆதரிப்பதாக தெரிய வந்துள்ளது. கமல் விஜய் ரஜினி என்று, பிரபலமாக இருந்து அரசியலுக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வரும் நபரை ஆதரிக்க தயாராக இருப்பதாக 32 விழுக்காடு பேர் தெரிவித்துள்ளனர். அதில் கமலுக்கு 4 விழுக்காடு பேரும்; நடிகர் விஜய்க்கு 9 விழுக்காடு பேரும் ரஜினி அரசியலுக்கு வந்தால், அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக 19 விழுக்காடு பேர் கூறியுள்ளனர். பாஜகவுக்கு வெறும் 6 விழுக்காடு பேரின் ஆதரவு மட்டுமே உள்ளது. அந்தக் கட்சி மீது தமிழகத்தில் கடும் வெறுப்பலை நிலவுகிறது. என்றனர்.

அப்படியானால் தொடர்ந்து அதிமுக, பாஜகவை சார்ந்திருந்தால் தமிழகத்தில் அடையாளம் இழந்து போகுமா?

என்ற கலக்கத்தில் அதிமுக ஓர் ஆய்வுக்கு ஆணையிட்டிருக்கிறதாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.