Show all

பாஜக இந்தியாவின் நிரந்தர முதலாளியாக இருப்பதற்கே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களா

01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக மாநிலத்தில் முதல் அமைச்சர் சித்தராமையா சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ரெய்ச்சூரில் செய்தியாளர்களிடம் சித்தராமையா கூறியதாவது:

மத்தியில் பா.ஜ.க.வினர் ஆட்சியில் உள்ளனர். தேர்தல் ஆணையம் அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. அவர்கள் தான் தலைமை தேர்தல் அதிகாரியை நியமனம் செய்து வருகின்றனர்.

அண்மைக் காலமாக நடைபெற்று வரும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதன் மீதான நம்பிக்கையின்மை அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

எனவே, முன்புபோல், வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும். கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.

இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்த உள்ளோம்.

இமாசலப்பிரதேசம், குஜராத் மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்பது வெறும் கருத்துக் கணிப்பு தான். தேர்தல் முடிவுகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பாஜக ஈடுபட்ட தில்லாலங்கடி வெளிப்படும்; பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,638

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.