Show all

ஆளுநர் பாதுகாப்புக்கு வந்த வாகனத்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்! வாகனம் மோதி இருவர் பலியானதால்

29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடலூரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தூய்மை இந்தியா திட்டத்தின் ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது வண்டிப்பாளையம் பகுதியில் திடீரென காரை நிறுத்தச் சொல்லி அவர் மேற்கொண்ட அதிரடியால் அசிங்கப் பட்டுபோன கையோடு,

அந்தச் சர்ச்சைகள் அடங்குவதற்கு முன்பே ஆளுநரின் வாகனம் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆய்வுப் பணியை மேற்கொள்வதற்காகக் கடலூருக்குச் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஆய்வுப்பணியை முடித்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை திரும்பினார். அமைச்சர்கள், அதிகாரிகள் இந்த வழியாகச் செல்லும்போது காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில், காஞ்சிபுரம் காவல்துறையினர் பாதுகாப்பு அளிப்பது வழக்கம். அதுபோல் இன்று ஆளுநர், கடலூரிலிருந்து சென்னை செல்லும்போது பாதுகாப்புக்குச் சென்ற வாகனம் காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான முட்டுக்காடு பகுதியில் வழியனுப்பிவிட்டு திரும்பி வந்தது.

அப்போது மாமல்லபுரம் அருகே புதுகல்பாக்கம் பகுதியில் சாலையில் வந்த இருசக்கர வாகனத்தின்மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த சுரேஷ் மற்றும் அவருடன் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என இரண்டுபேர் சம்பவ இடத்திலேயே பலியாகினார்கள்.

இதையடுத்து அங்கிருந்த மக்கள் திரண்டு பாதுகாப்புக்கு வந்த இரண்டு வாகனங்களையும் அடித்து நொறுக்கினார்கள். இதையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த கௌசல்யா என்ற மூதாட்டி மீதும் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் கேளம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். மேல்சிகிச்சைக்காக சென்னை கொண்டுசெல்லும் வழியில், அவர் உயிர் பிரிந்தது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,637

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.