Show all

எப்போது தெரியும் 150 வருடத்திற்கு பிறகு நிகழும் அரிய சூப்பர், நீல மற்றும் சிவப்பு நிலா?

இன்று மாலை சந்திர கிரகணம் நடைபெற இருப்பது அனைவரும் தெரிந்த ஒன்று. ஆனால் இன்று மேலும் சூப்பர் நிலா, நீல நிலா மற்றும் சிவப்பு நிலா ஆகியவையும் நடைபெற இருப்பது தெரியுமா?

நீல நிலா:
சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படுவதால் சந்திர கிரகணம் நிகழும். அப்படி இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் ஏற்படும் என்பது அறிவியல்.  அப்போது நிலா நீல வண்ணத்தில் காட்சி அளிக்கும் இது நீல நிலா நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது.

சிவப்பு நிலா: 
முழு சந்திர கிரகண நிகழ்வு நேரத்தி தவிர மற்ற நேரங்களில், நிலா சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். ஏனென்றால் கிரகணத்தின் போது சூரிய ஒளி நிலாவின் மீது நேரடியாக படாது என்றபோதிலும் வளி மண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைவதால் நிலா சிவப்பு நிறத்தில் தெரியும். இது சிவப்பு நிலா நிகழ்வு என கூறப்படுகிறது. 

சூப்பர் நிலா: 
நிலா பூமியை சுற்றி வரும்போது, மாதத்துக்கு ஒருமுறை பூமியை மிகவும் நெருங்கி வருவது வழக்கம். அப்போது, நிலா வழக்கத்தைவிட 10 சதவீதம் பெரியதாக காணப்படும். இது சூப்பர் மூன் என அழைக்கப்படும். இதுவும் நாளை நடைபெற இருப்பதால், நீல நிலா மற்றும் சிவப்பு நிலாவும் சூப்பர் நீல மற்றும் சூப்பர் சிவப்பு நிலாவாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவை அணைத்தும் இன்று மாலை 6.21 மணிக்கு தொடங்கி இரவு 7.37 மணி வரை நடைபெறும். அதன் பிறகு நிலா இயல்பு நிலையை அடைந்து விடும். இந்த மூன்று நிகழ்வும் ஒரே நாள் நடைபெறுவதால் இது அரிய நிகழ்வாக கருதப்படுகிறது. இதற்கு முன்னர் 1866 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி இந்த மூன்று நிகழ்வும் ஒரே நாளில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுகள் அனைத்தையும் நாம் வெறும் கண்ணால் பார்க்க முடியும். 


சந்திர கிரகணம் அன்று நம்பப்படும் சில வழக்கங்கள்:

  • சந்திர கிரகணம் நடைபெறும் நேரங்களில் உணவு சாப்பிடாமல் இருப்பது வழக்கம்.
  • கர்ப்பம் அடைந்த பெண்கள் கிரகணத்தை நேரில் பார்க்க வேண்டாம் என சொல்வதும்,  கிரகண நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என சொல்வதும் வழக்கம்.
  • கோவில்களில் நடை அடைப்பு செய்யப்படுவதும் வழக்கம். (திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காலை 11 மணி முதல் இரவு 10.30 மணிவரை நடை சாத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது)
  • கிரகணம் முடிந்த பின்னர் ஆலயம் மற்றும் வீடுகள் சுத்தம் செய்யப்படுவதும் வழக்கம்.
  • கிரகணத்தால் வரும் தீய கதிர்களை அழிக்க,  கடலை எண்ணெய் விளக்கு எரிய விடுவது வழக்கம். விளக்கில் இருந்து வரும் ஒருவித நெடி வீடுகளில் பரவும்போது கிரஹணங்களால் ஏற்படும் தீய கதிர்களை அளித்து விடும் என்று நம்பப்படுகிறது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.