Show all

நியாயத்தை நேர்பட பேசும் விஜயதரணி

01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சட்டப் பேரவையில் செயலலிதா படத்திறப்பு விழாவை காங்கிரஸ் கட்சி புறக்கணித்திருந்தாலும், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, படத்திறப்புக்காக பேரவைத் தலைவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

விஜயதரணியின் இந்த செயல்பாடு குறித்து கட்சி மேலிடத்திற்கு தெரிவிக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

இந்நிலையில் புதியதலைமுறையின் நேர்பட பேசு விவாதத்தில் பங்கேற்று பேசிய சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, ‘ஜெயலலிதா மரணமடைந்து ஒரு ஆண்டுக்கு பிறகு தான் அவரது உருவப்படம் தமிழக சட்டப்பேரவையில் வைக்கப்பட்டுள்ளது. என்னைப்பொறுத்தவரை இதுவே காலதாமதம் தான். தமிழகத்தில் பெண் தலைவர்களுக்கு இடமில்லையா? பெண் தலைவரின் படம் ஏன் இடம்பெறக்கூடாது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ராகுல், திருநாவுக்கரசர் போன்றோர் சென்று பார்த்தனர்.

செயலலிதா இறுதி அஞ்சலியில் ஸ்டாலின் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அப்போது எல்லாம் அவர்களுக்கு செயலலிதா குற்றவாளி என தெரியவில்லையா. என்னுடைய தனிப்பட்ட உரிமையை பறிக்க யாராலும் முடியாது. கட்சியின் முடிவுக்கு மதிப்பளித்து படத்திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை. உருவப்பட திறப்பிற்கு ஆதரவு தெரிவித்ததற்காக கட்சித் தலைமை எடுக்கும் நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்’

என தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,697

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.