Show all

இனமானத்தை முன்னெடுக்க, காங்கிரஸ் தலைவி விஜயதரணிக்கு கிடைத்த வாய்ப்பு

01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை பேரவைத் தலைவர் தனபால் நேற்று திறந்து வைத்தார்.

சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை திறக்கக் கூடாது என திமுக, காங்கிரஸ், தேமுதிக, பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. விழாவையும் புறக்கணித்தன.

இதற்கு அவைகள் தெரிவித்த காரணம், மக்கள் மன்றத்தில் அவருக்கான இடத்தின் மீதான காழ்ப்புணர்வில்-

ஊழல் வழக்கில் உச்ச அறங்கூற்று மன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் என்பது.

செயலலிதா படத் திறப்புக்கு கண்டனம் தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், ‘சட்டப்பேரவையில் நடைபெறும் ஜெயலலிதா படத் திறப்பு விழாவில் காங்கிரஸ் சட்;டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள்’ எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், நேற்று காலை விழா முடிந்ததும் தலைமைச் செயலகத்துக்கு வந்த விஜயதரணி, முதல்வர் கே.பழனிசாமி, பேரவைத் தலைவர் பி.தனபால் ஆகியோரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து செயலலிதா படம் திறந்ததற்காக பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக விஜயதரணியிடம் கேட்டபோது, ‘தமிழக காங்கிரஸ் தலைவர் அறிவித்தபடி நான் செயலலிதா படத் திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை. சட்டப்பேரவையில் 10 தலைவர்களின் படங்கள் உள்ளன. அவர்கள் அனைவரும் ஆண்கள். முதல் முறையாக பெண் தலைவரின் படம் வைக்கப்படுவதால் அதனை நான் வரவேற்கிறேன்.

ஒரு பெண்ணாக அரசியலில் பல்வேறு தடைகளைத் தகர்த்து சாதனை படைத்தவர் ஜெயலலிதா. பெண்களுக்காகவும், தமிழகத்துக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர்.

பெண் தலைவர் என்ற முறையிலேயே செயலலிதா படத் திறப்பை ஆதரித்தேன். இதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை’’ என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,697

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.