Show all

அதிமுகவுடன் நெருங்கும் வைகோ

காசி ஆனந்தன் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. காசி ஆனந்தன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவரது தம்பி செயமும் விடுதலைப் புலிகளின் தளபதியாக இருந்தவர்.

     தம்பி செயத்துக்கு என்ற காசி ஆனந்தனின் நூலின் 2-ம் பாகம் நூல் வெளியீட்டு விழாவில், பழ. நெடுமாறன், வைகோ ஆகியோருடன் சசிகலா கணவர் நடராசனும் கலந்து கொண்டார்.;

     இந்த நிகழ்ச்சியில் பேசிய வைகோ, நடராசனும் தாமும் எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அதுவும் குற்றாலத்தில் தமது திருமணம் நடைபெற்ற போது 3 நாட்கள் தமக்கு துணையாக இருந்து உதவி செய்தது நடராசன்தான். நான் நடராசனுக்கு நன்றியுள்ளவன். நன்றியை ஒரு போதும் மறக்கமாட்டேன் என்று குறிப்பிட்டார் வைகோ.

     அதே நேரத்தில், நடராசனை நான் இப்படி பாராட்டி பேசியதை ஊடகங்கள் திரித்தும் எழுதும். எனக்கு கவலையில்லை என்று வழக்கம்போல தம்முடைய பாணியில் வைகோ குறிப்பிட்டுவிட்டு அமர்ந்தார்.

     வைகோவின் இந்தப் பேச்சானது அதிமுகவுடன் மதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என்பதை மறைமுகமாக குறிப்பிடுகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.     செயலலிதாவை ‘அன்பு சகோதரி’ என குறிப்பிட்டவர் வைகோ. தற்போது நடராசனின் மனைவி சசிகலா, செயலலிதா இடத்தில் அமர்ந்திருக்கிறார். விரைவில் போயஸ் தோட்டத்துக்கு சென்று சசிகலாவை நேரில் சந்தித்து வைகோ வாழ்த்தக் கூடும். நடராசன் தமிழ் அமைப்புகளோடு நீண்டகாலமாக நெருங்கிய தொடர்பில் இருப்பவர். இயல்பிலேயே தமிழ் ஆர்வலரான வைகோ சசிகலா தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைக்க உறுதியான வாய்ப்புள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.