Show all

இணைய ஆர்வலர்களைத் திருப்தி படுத்தாத தமிழக வரவு-செலவுத் திட்டம்

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் பதிகை செய்துள்ள நடப்பு நிதியாண்டுக்கான தமிழக வரவு-செலவுத் திட்டத்திற்கு இணைய ஆர்வலர்கள்  அளிக்க விரும்பும் மதிப்பெண் குறிதது இயங்கலையில் திஹிந்து நாளிதழின் வாக்கெடுப்பு  ஓடிக் கொண்டிருக்கிறது.

அதில் சுழியத்திலிருந்து 24 மதிப்பெண்கள் அளிப்பதாக 81 விழுக்காடு பேர்களும், 25 மதிப்பெண்களிலிருந்து 49மதிப்பெண்கள் அளிப்பதாக 11 விழுக்காட்டு பேர்களும், 50 மதிப்பெண்களிலிருந்து 74 மதிப்பெண்கள்;; வழங்குவதாக 5 விழுக்காட்டு பேர்களும், 75 மதிப்பெண்களிலிருந்து 100 மதிப்பெண்கள் அளிப்பதாக 3 விழுக்காடு பேர்களும் வாக்களித்திருப்பதிலிருந்து இணைய ஆர்வலர்களுக்கு தமிழக அரசின்;;;;;;;; வரவு-செலவுத் திட்டத்தில் திருப்தி இல்லையென்று இந்த வாக்கெடுப்பின் மூலம் தெரிகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,727.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.