Show all

இரு தமிழ்மீனவர்கள், இந்தியக் கடற்படை துப்பாக்கிச் சூட்டில் படுகாயம்

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜெபமாலை என்பவருக்கு சொந்தமான படகில் நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கடலில் வலைகளை உலர்த்திக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ராணி அபாக்கா என்ற கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள், மீனவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். மீனவர்கள் தமிழில் பதிலளித்துள்ளனர்.

எவ்வளவோ செய்கை மூலம் தாங்கள் இந்தியர்கள், தமிழர்கள் என்றெல்லாம் சொல்ல முயன்றும் செவிமடுக்காமல் தமிழ் தெரியாத இராணுவ விரர்கள் திடீரென ரப்பர் குண்டுகள் நிரம்பிய துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதில் மீனவர்கள் கடுமையாக அதிர்ச்சியடைந்தனர்.

கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பிச்சை, ஜான்சன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் ராமேஸ்வரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

-அந்தந்த மாநிலம் சார்ந்து பணியில் ஈடுபடுத்தப் படுபவர்கள் அந்தந்த மாநில மொழி தெரிந்தவர்களா என்று ஆய்வு செய்யவேண்டியது நடுவண் அரசின் கடமை; அதுதாம் கூட்டாட்சித் தத்துவத்திற்கான இறையாண்மை

தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,606

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.